வானில் மின்னல் வரும் நேரம்

வானில்   மின்னல் வரும் நேரம்

வான  வில் வளைந்ததே

அதன் கீழே

மஞ்சள் நிறமோடு  மேகம்

தேரில்   ஏறி வந்ததே

 

என் அழகிய ரகுவரனும்

உடன் இங்கு வருவான்

உதயங்கள்  வரை இனி என்றும்

புதுமைகள் பொழிவான்

 

இந்த சீதைக்கும் ….

இந்த சீதைக்கும் ப்றியமருளின வானில்…..

 

பூஜைக்கு மலர் தூவும் வேத மந்திரங்கள்

குளிரால், சிலிர்த்துவிடும்,

தியானத்தால் பரவுமந்த தைவ வசனங்கள்

ஆகாயம், வரை செல்லும்,

நதியில் நீராடி தலை துவட்டும் மாலை ராகங்கள்

காற்றில்வயல்க்காட்டை  தழுவிவரும்

 

எங்கும் பரவிடும் பனிக்கோலம்

பாடும் குயிலுக்கு கொண்டாட்டம்

எங்கும்  மாம்பூக்கள் வளர்ந்தாடும் கோலம்.   வானில்…..

 

 

தேனூறும்  தெம்மாங்கு பாடிடும்  காற்றில்

குனியும், மலர்க்கொடிகள்,

காலை உயர்கின்ற  சூரியனின் மஞ்சள் தோற்றம்

பொன்னின், மணிவிளக்காய்

பறந்து  மாங்கொம்பில் கூடு தேடும் வண்ணக்கிளிகள்

இணையை,தேடும்,

ஊஞ்சலில் ஆடி ப்பாடுகின்ற  இளம் ஜோடிகள்

தன்னை, மறக்கும்,

 

எங்கும்  மந்திரம் தழுவிடும்  பந்தங்கள்

கண்ணில் பரவிடும்  நாணல்கள்

இது ஓர் புனர்ஜென்ம திருக்கோல தோற்றம்வானில்….

 

 

சுந்தரேச்வரன் Date: 22nd Feb 2016

 

Courtesy: Lyric:  “Minnaaram  maanathu  mazhavillodinjallO”

Lyricist:  S ramesan Nair Sir  Film:  Guru  Music: Maestro Ilayaraja Sir Singer:  Sujatha Madam

Raag:  Hamsanaadam

Dear Sir  Thanks for the inspiration to translate in Tamil with changes as some words in Malayalam do not have the apt Tamil words to meet the flow.

Please link with https://www.youtube.com/watch?v=LOIM8uHXxdQ  to listen to the melodious instrumental  music

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s