பச்சை மாமரக்கொம்பில்

பச்சை மாமரக்கொம்பில்

ஓர் மாவிலை கொடியில்

தன்னம்தனியாய் தன்னை மறந்து

ஆடிடும்  கிளியே

இணை எங்கே துணை எங்கே

உன் இணை எங்கே துணை எங்கே

சொல்லாயோ கிளியே

 

பனி மழையில்  முற்றும்  நனைந்து

தென்றல்  வந்தது  வாசல்க்கதவோரம்

தனிமையில்  ஒரு கனவுலகினில்

கூட்டுக்குள்ளெ  நீயும் இருந்தாய்

உதடில் தேன் அமுதுடன் உன் காதலன் வந்தான்

உன் மனதில் குளிரலை ஒன்று நிறைந்ததன்னேரம்

 

விழிகள் ஓர விழிகள்   ஒன்றோடொன்று

கதைகள் சொல்லிடவே

உள்ளத்தில் அடித்ததம்மா கல்யாண மேளம்

என்றும் காணா   ஓர் இன்பம்

அங்கே நெஞ்சோடு கலக்க

கொஞ்சிக்கொஞ்சி பேசி அவன்

உன்னுடன் கலந்தான்   

சின்னம்சிறு சிறகை விரித்து  அவனுடன் சேர்ந்து

வெகு தூரம் எங்கோ பறந்து செல்லணும்

என்றொரு எண்ணம்

உன் மனதில் அலை தழுவிட பிறந்ததன்னேரம்.

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date: 21st jan 2016

 

Courtesy:  Lyric: “ ManjaNi kkombil, oru kinkiNi thumbil”

Lyricist:  Bichu Thirumala Sir  Film:  Manjil virinja PookkaL(1980)

Music:  Jerry AmaldEv.  

A classic touch of Raag Hameer kalyani.  Sing this song in a happy mood.

 

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with changes in few words and lines.

 

Please link with https://www.youtube.com/watch?v=kmrDulpN1jo to listen this song by Janaki Amma 

 

 

 

 

 

The imagination can work out this way as well, I hope.

 

பனி மழையில்  முற்றும்  நனைந்து

தென்றல்  வந்தது  வாசல்க்கதவோரம்

தனிமையில்  ஒரு கனவுலகினில்

கூட்டுக்குள்ளெ  நீயும் இருந்தாய்

ஆசை கொஞ்சும் மனதில் எங்கும் 

அவன் நிறைந்தாட

ஊடல்    கொஞ்சம்  கூடல்  கொஞ்சம்  

அவனுடன் செய்ய   

மனதுக்குள் புகுந்ததம்மா கனவலை கூட்டம்

 

 

 

என்றும் காணா   ஓர் இன்பம்

அங்கு நெஞ்சோடு அணைய

ஒரு காதலின்  குளிர் மழையினில்

இருவரும் நனைய

கொஞ்சிக்கொஞ்சி பேசி அவன்

உன்னுடன் கலந்தான்

வஞ்சிக்கொடி  நீயும் அவன்

மார்பினில்  சாய்ந்தாய்  .

 

 

இன்று  அங்கும்  இங்கும்  எங்கும்

கேட்க்கின்ற கீதம்

காதலன் வருகை குறிக்கும்

காதல் சங்கீதம்

விரல் பட்டால்    இடை தொட்டால்

சிலிர்த்திடும்  தேகம்

காதலில் வருமொரு

சுருதி நதி யின் ஆரம்ப ஒழுக்கம்

இனியொரு  நதியில்  ஒழுகும் 

இசையில் மயங்கும் நிலை வரும்  வரைக்கும்

இறுதியில் வரும் சுகம் அதில்

என்றும்  ஆனந்த மயக்கம்.

 

By Sundareswaran  Date: 21st Jan 2016  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s