தென்றலின் சிலிர்க்கும் ஒலியைப்போல்

தென்றலின்  

சிலிர்க்கும்  ஒலியைப்போல்  

என்னிடம்

மெல்ல வந்து நீ கொஞ்சவா   

சத்தங்கள்

ஸ்வரங்களாக கோர்த்து

ஒன்றோடொன்றாய்

இணைந்துகொள்ளும் கீதம்போல்

 

பூ விழியுடன் பால் சிரிப்புடன்

உதித்ததிந்த காலையும்

 

இந்த பாதையில்

இந்த இயற்க்கையில்

நாம் ஒன்று சேர்ந்து

என்றும் இதில் ஒழுகிச்சேரலாம்

 

வயல்களில்

நிறைந்து நிற்க்கும் கதிர்களும்

காற்றில்  ஆடுதிங்கே

கொசிந்து வைத்த புடவைபோல்

 

வய லோரங்களில்

விரிந்து நிற்க்கும் வண்ண பூக்கள்

தன்  அழகை காட்டுது

புடவையோர ஜரிகைபோல்    

  

ஒவ் வொரு  காலை  நேரவும்

ஒவ் வொரு  மாலை  நேரவும்

பகலிலும்  இரவிலும்

இந்த இன்பம் சேரும் ராகம் மீட்டி

என்றும் இனிமையாய் பாடலாம்.

 

சித்திரை  வெயிலிலும்

அதன்  பின் வரும்  மழையிலும்

அந்த வானத்தின்  கீழெயும்

இந்த மண்ணின்  மார்பிலும்

 

ஒவ் வொரு  சுமையையும்  

ஒவ் வொரு  கனவையும்  

பூ போலவும் மொட்டைப்போலவும்

இந்த இரு கைகளையும் நீட்டி

என்றும் இங்கே ஏற்றுக்கொள்ளலாம்

 

சுந்தரேச்வரன் Date: 12th Jan 2016

 

Courtesy: Lyric:  “Thennalin chilanga pOle”       Film: Onnum  Mindaathe

Lyricist:  Rafeeque Ahamed       Music: Johnson

Melodious lines. The break in words gives a special treat for the ears.

Dear Sir, thanks for the inspiration to translate in Tamil with a little changes.

The scenic beauty of the surrounding landscape through which the happy family is riding a mobike and walking on the pathways of the paddy field near the canal brimming with water are really breathtaking. Where is this place in India? 

 

 

Please link with https://www.youtube.com/watch?v=HmrEIKbwZMI    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s