மானஸரோவரம்

ராக ஹேமந்தம் விரிகின்றபோல் அழகை

மாலை நேரத்தில்  கண்டேன் நான்

பால்க்கதிர் வீசும் முழு நிலாவின்

ஒளியெங்கும் பரவக்  கண்டேன் நான்

வான் மேடையில் பொன் வண்ணமுடன் கொண்ட

ஆகாய கங்கையை கண்டேன்  நான்

கைய்யில் பொன் தாலம்  ஏந்திவரும் கதிரோனின்

கும்குமப்பூ வண்ணம் கண்டேன்  நான்

ஏழு வண்ணங்கள் ஒன்றாய்  உருசேர்ந்த

உன் அழகுரூபமதை

வானளா உயரம் நிற்ப்பதாய்  அதனை

எங்கும் எங்கும்  கண்டேன்  நான்.

 

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

உன் அழகு ரூபமத்தை

காண இனி  ஒன்றும் நான் விரும்பவில்லை

இனி என்றும் என் வாழ்விலே.

 

குளிர் காற்று எங்குமெங்கும்

நிறைந்து வீசிடவே

ஓர் ராகமாலிகை வீணை இசைபோல்

பரவ கேட்டேன்  நான்

தென்றல் வந்து பனிச்சாறலில்

தழுவி செல்லயிலே

அதில்  இரவுநேர கிளிகள் பாடும்

கீர்த்தனங்கள் கேட்டேன்  நான்

பனி உருகி நீராக சிதறி சிரிக்கயிலே

உன்னை  நினைத்து நின்ற  என் மனதில்

ப்ரணவ மந்திரம் கேட்டேன்  நான்

 

கேட்டுவிட்டேன்  கேட்டுவிட்டேன்

உன் திருவாய் மொழி மந்திரம்

கேட்க்க இனி ஒன்றும் நான் விரும்பவில்லை

இனி  என்றும் என் வாழ்விலே

 

பனித்துளிகளில் நடந்திடவே

உடலில் நடுக்கம் உணர்ந்தேன் நான்

நீ இருக்கும் புனித பூமியில்

உன்னை தேடி வந்தேன்  நான்

இரவு பகலாய் நடக்கும்போதும்

உன்னை மட்டும் நினைத்தேன் நான்

தாகமறியா பசி அறியா

உன்னை வந்து அடைந்தேன் நான்

 

அடைந்து விட்டேன்  அடைந்து விட்டேன்

உன்  திரு பாதங்களை

நான் அடைந்திட இனி ஒன்றும் விரும்பவில்லை

இனி  என்றும் என் வாழ்விலே

 

சுந்தரேச்வரன்  

 

By  Sundareswaran  Date: 27th  Dec  2015

 

Inspiration from the lyric of Sri  Girish Puthanchery “Raaga Hemantha sandhya pookkunna”

Pranaams to you,Sir.

 

While reading this and listening the music, I was taken away from it to a faraway place not known to me or seen earlier. I could see a mountain and snow and a river. This made me to rewind my mind for very many years. Our family friend Mr Vasudevan naboodiri had a pilgrimage mission to Manasarovar and I had an opportunity to see his diary notes and photographs of that place. In my deep imagination, I felt, I am also travelling with him to Manasarovar, the heavenly abode of Lord Shiva.

When I read this romantic lyric, my mind got converted into a divine feeling. Lord Ganesa and Parameswara came before me and the result turned into a song with the title MAANASAROVARAM.

I hope this can be set to Raag  Darbari Kanada

 

At one level, the masculine temper of the raga gives it a majestic swaroop, at another level,  the poignancy of the raga evokes a feeling of vairagya, total detachment from worldly pleasures, a mood for meditative solitude or seclusion.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s