ஒளிந்திருக்க ஒன்றாய் ஒளிந்திருக்க

ஒளிந்திருக்க  ஒன்றாய் ஒளிந்திருக்க

வாசல் எங்கும் பூத்திருக்கும்  

முல்லைப்பூவில் பனித்துளிபோல்  ஒளிந்திருக்க

 

காதில் பேசவே  கொஞ்சம் மெல்ல பேசவே

சுற்றித்திரியும் வண்டுடன் நான்

பின்னால் ஓடவே

 

மஞ்சு பொழிய  என்  மனம் நிறைய

 

நூலில் கோர்த்த பூக்களைப்போல்

குழந்தைக்கால  ஞாபகங்கள்

 

ஒளிந்திருக்க ஒன்றாய் ஒளிந்திருக்க

தென்றல் வந்தென்  ஊஞ்சலில்

சேர்ந்திருந்து ஆடும்போல்

ஒன்றாய் இருக்க  இன்றும் ஒன்றாய் இருக்க

முல்லைப்பூவில் பனித்துளிபோல் ஒளிந்திருக்க

 

மஞ்சள் வெய்யில் மாலை வெய்யில்

மழைக்காக வானம் காட்டும்  வண்ணமோ?

வண்ணப்பூக்கள் வெள்ளைப்பூக்கள்

பூமிக்குத்தான் அவையெல்லாம் சொந்தமோ?

தென்றல் வந்து வீசிடவே

தலைசாயும் கதிர்களெல்லாம்

நாட்டியமாட தெரியுமென்ற எண்ணமோ?

 

ஒன்றோடொன்றாய் இவையெல்லாம்

இணையவே மனதுக்குள்

 

பெய்து ஓய்ந்த மழையில்

நான் நனைந்த ஞாபகங்கள்

 

ஒளிந்திருக்க  ஒன்றாய் ஒளிந்திருக்க

வாசல் எங்கும் பூத்திருக்கும்  

முல்லைப்பூவில் பனித்துளிபோல் ஒளிந்திருக்க

  

தன் இணையை அழைப்பதற்க்காய்

ராகம் பாடும்  சின்னம் சிறு குயிலம்மா

புது நெல்லு புது நாற்று வளர்ந்திடும் வேளையில்

புதுமணம் வீசும்  வயல்க்காடே

 

ஒன்றோடொன்றாய் இவையெல்லாம்

இணையவே மனதுக்குள்

 

பாதி மாய்ந்த  வெயிலில்

நான் நடந்த ஞாபகங்கள்

 

ஒளிந்திருக்க  ஒன்றாய் ஒளிந்திருக்க

வாசல் எங்கும் பூத்திருக்கும்  

முல்லைப்பூவில் பனித்துளிபோல்  ஒளிந்திருக்க

  

 

சுந்தரேச்வரன்

By Sundareswaran  Date:  01 Dec 2015

 

Lyric: “ OLichirunne onnichoLichirunnE”

Lyricist:  Girish Puthanchery Sir  Singer:  Rajalakshmi  Film:  Janakan

A very good movie for the present generation to understand the human values and do good what he or she can for the society. It was a forerunner to DRISHYAM.

 

Dear Sir, Thanks for the inspiration to translate in Tamil with a little changes.

A wonderful location was selected for this song that matches with the Raag. Even Swiss Alps will raise their peak to see such a wonderful place in our country.

 

A wonderful lyric in raag  Hamsanaadam. The reverberation created in the lines

Neithalaambalaai Ormakal

Peithu thornna mazhayil

Paathi maanja veyilil

 

Annum  innum ennum enikkOrmayaai

Veendum veendum aNaiyum.

 

Wah re Wah! Sir.  See how your lines got a mesmerizing effect in my hand with those four lines.

That is your Punch mark Sir. My Pranaams to you.

 

Please link with https://www.youtube.com/watch?v=9mckp5iGlTM to listen to the beautiful song and the photography.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s