கல்லில் நீ இருந்தாலும் கண்ணா

கல்லில் நீ இருந்தாலும் (கண்ணா)

கண்ணில் தெரிகின்றாய்  

கல்லுக்குள்ளேன் இருக்காய் (கண்ணா)

கல்நெஞ்சம் உனக்கும் உண்டோ?

 

கண்மூடி நிற்க்கையில்

கண்ணுக்குள் தெரிகின்றாய்

கண் திறந்த நேரம் ஏன்

காணாமல்  மறைகின்றாய்

 

கவலைகள் என் மனதில்

கடல்போல் கொந்தளிக்க

கலங்காமல் நிற்கின்றாய்

கற்ச்சிலையாய்  என் முன்னில்  

 

கலியுக மென்பதால்

கண் திறக்கமாட்டாயா

கண்ணீர் வடித்துக்கொண்டே

காலத்தை  கழிப்பேனா ?

 

குருக்ஷேத்திரப் போரில்

களத்தில் நீ குதித்தாய்

கலங்காமல் பார்த்தனுக்கு

கடிவாளம் பிடித்தாய்

 

கலங்கும் என் மனதின்

களத்தில்  நீ குதிப்பாயா

கருணை காட்டி ஏனும் கண்ணா

கொஞ்சம் எனது

கண்ணீரை துடைப்பாயா?

 

சுந்தரேச்வரன்  Date: 09  September 2015

“Ellaam  Avan  seyal”

When Mr. Viswanathan of 10 C wanted a poem to calm the mind, I prayed to Lord Ganesa to give me words and He gave these lines. Vinayaka Chathurthy  Celebration is forthcoming and Let me pray for a poem.

We can add கண்ணா in every alternate line

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s