சென்னையில் மழை

செம்பரம்பாக்கம் ஏரி  நிரம்பிச்சா

செம்பரம்பாக்கம் ஏரி  நிரம்பிச்சா

மழை வெள்ளம் பெருக,

தண்ணி கஷ்ட்டம் நீங்க

எல்லோரும்  மகிழ

செம்பரம்பாக்கம் ஏரி  நிரம்பிச்சா

இன்னும்  நிரம்பி வழியவேண்டுமா?

 

பூண்டி கூட சேர்ந்து நிரம்பிச்சே

அதை  நீ பாரு,        அதன் பின் கூறு

காவேரி  இன்னும்  வேணுமா?

கிருஷ்ணா தண்ணி இப்போ தேவையா?

 

வேளாச்சேரி வென்னிஸ் ஆனதா

வேளாச்சேரி வென்னிஸ் ஆனதா

மழை தண்ணி  பெருக,

குட்டை குளங்கள் ஒன்று சேர

எல்லோரும் தவிக்க

வேளாச்சேரி வென்னிஸ் ஆனதா

வென்னிஸ்  செல்ல இன்னும்  ஆசையா?

 

நீண்ட நாளாய் காத்துக்கிடந்தோம்

தண்ணி தேங்கும் ஏரியை மூடி மறைத்தோம்

கனவில் ஏதோ  கணக்கு போட்டோம்

நிலத்தை வித்து  சொத்து சேர்த்தோம்

முட்டாள்த்தனத்தால்  மனைகள் வாங்கி

முழுதாகவே முங்கி தவித்தோம்

………..

கனவில் போட்ட கோலங்களெல்லாம்

கார்மேகம் வந்து  கலைத்துவிட்டது

 

அய்யோ புயல்  வந்து விட்டதே

கூட மழையும் கொட்டி தீர்த்ததே 

 

காசு கொஞ்சம்  சேரும்  நேரம் 

ஆசைகள் நெஞ்சை அலைமோதவைக்கும்

கணக்கில் சேரா பணத்தை  வைத்து

காரு பங்களா வாங்க தூண்டும்

பொன்னில்  ஆசை  மண்ணில்  ஆசை

எல்லாம் சேர்ந்து  பேராசையாகும்

விளம்பரங்கள் உன்னை தாக்கும்

வங்கியும் கோடிகள்  அள்ளிக்கொட்டும்

….

காத்துக்கிடந்த ஆசையெல்லாம்

வங்கக்கடலில் ஒன்றாய் சேரும்.

 

கூவம் கூட   ஆறாய்   பெருகுதடா

அடையார் கூட சேர்ந்தே  ஒழுகுதடா

இதில்  தோணி ஓட்ட ஆசை பெருகுதடா

தோணீக்குத்தான்  எங்கே போவேனடா?

 

வேனல்  வந்தால்   தண்ணி கஷ்ட்டம்

மழை வந்தால்     பெரும்  நஷ்ட்டம்

கணக்கை எடுத்து  கூட்டி க்கழித்து

எண்ணிப்பார்க்கும்  நேரத்துக்குள்ளே

….

அடுத்த மழையும்    வந்து சேரும்

குடிமகன் கதியோ    ஆண்டவனை சாரும்

 

அய்யோ புயல்    வந்து விட்டதே

கூட மழையும்    கொட்டி தீர்த்ததே 

  

 

 

சுந்தரேச்வரன்   Date: 21st Nov 2015

Raag:  Malayamarutham.

 Angu  avargaLukku  Thendral ennai muthamittathu

Padathin peyaro  Oru  Odai  nadiyaagirathu

Indru inge  Oru  maaperum pattiNam neerukkuL  muzhugiselgirathu. Enna muranpaadu.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s