புயலோ புயல் மழையோ மழை ஹ ஹ ஹா !

புயலே சென்னையை நெருங்காதே

நீ நெருங்கும்  நிலையில் அது இல்லை

மழையே சென்னையில் பொழியாதே

நீ பொழிந்தால் சென்னை  தாங்காது

 

கோடையில் ஒருநாள்  மழை வரலாம்

இக்கோலத்தில் மழை கொட்ட தாங்கிடுமா

சாக்கடை குட்டை குளம் ஒன்று சேர

இந்த ஒற்றுமை வேறெங்கும் காண்பதுண்டோ

 

பல ஆண்டுக்கு ஒருமுறை மழை தாக்கும்

பகுத்தறிவுடன் அதை கணக்கெடுப்பார்

பகுத்தறிவுள்ளோர்  பலர் இருந்தும்,  அதை

பஞ்சுபோல்  வானத்துக்கனுப்ப யாரால் முடியும்.

 

பஞ்ச பூதங்களை பதைக்காதே

அது உன்னை நேரம்பார்த்து தாக்கிவிடும்

மனிதா நீ அறிவுள்ளவன் என்று  நினைக்காதே

அவைகளை தடுக்க முயலாதே .

 

ஆயிரம் கோடிகள் செலவுசெயதும்

ஆகாயம் பார்த்தே இருக்கவேண்டும்

ஆனதெல்லாம்  இங்கே ஆனபின்னே

அந்த ஆண்டவன் தானப்பா காக்கவேண்டும்.

 

சுந்தரேச்வரன்   

(பீ பீ ஸ்ரீநிவாசும் ஜெமினியும் இப்படிக்கூட பாடியிருப்பார்)

 

வானிலை ஆராய்ச்சி மன்றத்துடன் ஓர் தொடர்ப்பு :

 

மாதவன் சார்  மழை நிக்குமோ நிக்காதோ?

நான் எப்படியப்பா அதை சொல்லுவேன், அதை ஜப்பான் காரனிடம் பொய் கேள். ராசி பலன்களை மாற்றி மாற்றி  எழுதுவதுபோல்  நாங்களும்  வானிலையை மாற்றி மாற்றி எழுதி சமாளிக்கிறோம் . எல்லாமே ஒரு பரமபத  விளையாட்டுதானேநில நடுக்கத்தையும் எரிமலையயும்  தடுக்க முடியாமல்  அவன்  அலறுகிறான். நம்ம இம்மாத்துண்டு விஷயத்தை  நான் யாரிடம் பொய் கேட்ப்பேன். அவன் புள்ளெட்  ட்ரெயினில் பறக்கிறான். நாமேன்னடா இந்த சக்கடத்தை ஓட்டிப்பிழைக்கவே தள்ளாடுகிறோம்

அவன் தலை கீழாக ட்ரெயின் ஒட்டி செல்கிறான். நாமேன்னட  நிமர்ந்து நின்றாலே கீழே விழுந்து விடுகிறோம்.

பூமி கூடவே சுற்ற பணம் தேவையில்லை.

சூரியனை சுற்றவும்  பணம் தேவையில்லை.

இப்போது வேளச்சேரிக்காரன் வேநிசே செல்லவும்  தேவையில்லை

இதயெல்லாம் பேசி நேரத்தை  வீணாக்கவும் தேவையில்லை.

பொய் வா மகனே போய்  வா

புன்னகை புரிந்தே போய்  வா போய்  வா.

நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்  தெய்வம் ஏதுமில்லை

நான் என்னவென்று சொல்வேனடா

இந்த வானம் காட்டும் மாற்றங்களை

எதை வைத்து சொல்வேனடா இந்த

இயற்க்கையின் சீற்றங்களை

 

மாதவன் சார்  நீங்கள் த்ரிகால ஞானி தான் சார்   பலே பலே

 

Courtesy: Chennai Times. Dated 19th Nov 2015

“Hallelujah, it’s raining memes!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s