தென்றல் அலைபாயும்

தென்றல்,  அலைபாயும்  சுருள் முடியிங்கே

அலைகடல் அழகுமயம்

இமை திறந்த கண்கள் இரெண்டும்

கதிரவன் ஒளி உதயம்

கன்னங்களோ தாமரை மலரின்

குங்கும  வண்ணமயம்

என்னவளே  நீ எனக்கிங்கே

அழகாய் திகழும் கலை அரங்கம்.

 

வெண்ணிலா கூட உன் முகம் காண

வெட்கத்தில் மறைந்திடுமே

பவழம் கூட உன்னுதடை கண்டால்

தன்னை  மறந்திடுமே

புருவங்கள் என்ன  காமன் குலைக்கும்

வில்லுக்கு  இலக்கணமோ

அதில் தொடுத்திடும் அம்புகள் யாவும்

உனது  கண்முனை  கூரினமோ

என்னவளே  நீ எனக்கிங்கே

அழகாய் திகழும் கலை அரங்கம்.

 

உன்  மேனி எழிலின்  வண்ணமிதென்ன

கதிரவன் ஒளியலையோ

மஞ்சள் உனது வண்ணம் காண

தேய்ந்தே போய் விடுமோ

உன்னுடலில் வீசும்  வாசம் என்ன

மனதை கவருதிங்கே

மலர் தோட்டமே  வந்துன் உடலில் எங்கும்

ஒன்றாய் சூழ்ந்தனவோ

என்னவளே  நீ எனக்கிங்கே

அழகாய் திகழும் கலை அரங்கம்.

 

 

சுந்தரேச்வரன் Date: 30th Oct 2015          By  Sundareswaran 

Raagam:  Naattakkurinji

Courtesy: Lyric: “ Thira niRayum churuL mudiyil saagara saundaryam”

Lyricist:  Girish Puthanchery Sir   Singer: KJY Sir

 

Please link with https://www.youtube.com/watch?v=X7CHMOOBVKw to hear the melody in Malayalam.

This can be either a mortal romantic portrayal or a cosmic revelation.

 

Dear Sir, Thanks for the inspiration and I have taken out few lines to suit the Tamil lines and reoriented the Tamil lyric. The super speed swarakalpana by KJY is fantastic.

In the same lines I have written a small lyric on PARANTHAAMA ON LORD KRISHNA.  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s