குரு வந்தனம்

குருதேவனின்  திருபாதம்  வணங்கிடுவோம்

நாம்  என்றும்  என்றும்

குருதேவனின்  திருபாதம்  வணங்கிடுவோம்

   

மாதா பிதா குரு தெய்வம்

நான்கும் இங்கோர் புது வேதம் (2)

முதலிரெண்டும் நம் உயிரின் ரூபம்

முடிவிரெண்டும் நாம் உணரும் பாவம் (2)

 

மாதா என்பது  உயிரின் வேதம்

பிதா என்பது  உறவின்  வேதம்

 

குருதானே அறிவின் வேதம்

அடிபணிவோம் அவரின் பாதம் (2).

 

தெய்வம் என்றும்  இவர் மூன்றில்

ஒளிந்திருக்கும் நிரந்தரம்

அழிவில்லாத  ஆத்மாவில்

நிறைந்திருக்கும்  ஆத்மவேதம் (2)

அது  நாம் செல்லும் நல் வழியிலெங்கும்

துணை வருமே

நாம்  வாழும்  வரையில் என்றும்.

 

இயற்கையை நாமிங்கு பார்ப்போம் (2)

மனம் தளரா

கொடுத்துக்கொண்டே இருக்கும் தெய்வம்(2)

நம் பேராசையினால்  அதன் மனம் கலங்கி

எடுத்துக்கொள்ளும் சூழல் நேரும்.

 

தெய்வம் கூட   எடுக்கும் கொடுக்கும்

அது  அவனே  விதிக்கும்  நியாயம்  

 

நாம்  வணங்கும்  குருதேவனோ ?

மனம்தளரா தன் அறிவைப்புகட்டி

திருப்பி எடுத்துக்கொள்ளாதவர் என்றும்.(2)

 

சுந்தரேச்வரன்  date: 21st Oct 2015

 

 

 

 

“இயற்கையை நாமிங்கு பார்ப்போம்   

மனம் தளரா

கொடுத்துக்கொண்டே இருக்கும் தெய்வம்

 

இந்த வரிகள் என் மனதில் வந்தது  அந்த பரமாச்சார்யரின்  என்றும்   நிரந்தரமான  அந்தமைத்த்ரீம் பஜத”  காவியத்திலிருந்து பிறந்தது.

 

जननी पृथिवी कामदुघास्ते

जनको देवः सकलदयालुः

 

 

அந்த குருதேவனுக்கும் என் பரிபூரணமான நமச்க்காரங்கள்.

 

This is what our Mahathma also revealed:  We have everything on this Mother Earth for our NEED and nothing for our GREED

 

My profound pranams to Sri Lalitha Daasar who wrote this immortal poetry “Paavana Guru Pavanapuraa DheeshamaasrayE” on Lord Krishna in Raag HAMSAANANDI and it got rejuvenated by the Carnatic singer KJYesudas. My pranams to him as well.

This poem belongs to all Gurus who came at different stages in my life.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s