கலை மகளே

கலை மகளே,   வீணை மீட்டாயோ

பொன்னிழைகள் மீட்டவே

ஸ்வரங்கள் அலைபாய

புது  ராகம்  இசைப்பாயா

சங்கீத தேன்

மழை அதில்  பொழிவாயா?

 

மொழி தந்த வாணியே,   உன்

விழிகளால் ஒரு பார்வை

அதுவே போதும்  எனக்கு

என்றும் நல்வார்த்தை

என்றும்  நல்லெண்ணம்

என்னில்  வருவதர்க்காய்

என்றும் சுடர்விடும்

அறிவின் புத்தொளி

என்னில்  நிறைவதற்க்காய்

 

அதுவே எனக்கோர்

தூண்டுகோல் ஆகிவிடும்

அதை நீ அளிப்பாயா

என்னில்  நீ வந்து

என்றும் குடிகொண்டு

எனக்கதை அளிப்பாயா?

 

அறிவை  அளிக்கும் 

கலைவாணியே உனக்கு

பல கோடி நமஸ்க்காரம்

எனக்களித்த  அறிவுரை

தடங்கல் இல்லாமல் என்னுடன்

தொடர்ந்து வருவது

உனது  அருளாகும்

என்றும் உனது அருளாகும்.

 

கலை மகளே,   வீணை மீட்டாயோ

பொன்னிழைகள் மீட்டவே

ஸ்வரங்கள் அலைபாய

புது  ராகம்  இசைப்பாயா

சங்கீத தேன்

மழை அதில்  பொழிவாயா?

  

 

சுந்தரேச்வரன் Date: 4th Oct 2015   Lord Ganesa and kalaivaaNi gave me these words  This is the week of Navarathri festival.  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s