இந்தச்சிட்டு குருவிக்கந்த நிலா தொட்டில் எதற்க்கு

இந்தச்சிட்டு  குருவிக்கந்த  நிலா தொட்டில்  எதற்க்கு

இங்கு பட்டுத்துணியில்  தொங்கவிட்ட தூளி இருக்க

அன்பு உள்ளம் கொண்ட தாய் தந்தை  இருக்க

அள்ளித்தரும் தெய்வம் இங்கு  துணை நமக்கு   ஆரீராரொ  ஆரீராரொ

 

வெட்டவெளி வானத்திலே  கட்டித்தங்கம் இருக்கு

தட்டி த்தட்டி  அதை கொஞ்சம் வெட்டி எடுத்திடவா

வெட்டி எடுத்திடவா

 

தங்கக்கட்டி  தங்கக்காசு எல்லாம் நமக்கெதற்க்கு

தங்கச்சிற்ப்பம் போன்ற நம் சிட்டு  நமக்கிருக்க

நம்  சிட்டு  நமக்கிருக்க  

 

வள்ளுவனார்  ஆத்துச்சுடி நமக்கது  எதற்க்கு

கொஞ்சி கொஞ்சிப்பேசும் இந்த மழலை மொழி இருக்க

மழலை மொழி இருக்க  

 

பொன்னு  வெள்ளி வைரம் எல்லாம் நமக்கிங்கு  எதற்க்கு

இதன் புன்னகைக்கு  ஈடுசெய்ய பொருள் என்ன இருக்கு

பொருள் என்ன இருக்கு  

 

வானம் பூமி யாவும்  எல்லாம் சொந்தம் இங்கு  நமக்கு

வானத்திலே  வீடுகட்ட ஆசையில்லை நமக்கு

ஆசையில்லை நமக்கு  

 

ஒன்றாய் சேர்ந்து வாழும் உள்ளம் நமக்கிங்கு  இருக்க

என்றும் இங்கு சொர்க்கம் என்ற நிறை அதில்  இருக்கு

நிறை அதில்  இருக்கு

 

குறை ஒன்றும் இல்லை என்ற  மனம் அது போதுமே

குரல் கொடுக்கும் நேரம் அந்த தெய்வம்  முன்னில் தோன்றுமே

அந்த தெய்வம்  முன்னில் தோன்றுமே.

 

இந்தச்சிட்டு  குருவிக்கந்த  நிலா தொட்டில்  எதற்க்கு

இங்கு பட்டுத்துணியில்  தொங்கவிட்ட தூளி இருக்க

அன்பு உள்ளம் கொண்ட தாய் தந்தை  இருக்க

அள்ளித்தரும் தெய்வம் இங்கு  துணை நமக்கு   ஆரீராரொ  ஆரீராரொ

ஆரீராரொ  ஆரீராரொ

 

   

சுந்தரேச்வரன்   date: 14th  Oct 2015

Courtesy: lyric: Chittu chittu kuruvikku

Lyricist:  Pazhani  Bharathi   Film : Nenjathai Allithaa

Please link with

While this song is  totally romantic in nature with question answer session, that too sung with so much richness and opulence, my song is a lullaby coming out from the hut.  I took out the first two lines and made a change keeping the tune alive. Sir,thanks for the inspiration . 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s