இயற்கையே ராகமானது

என்  மனதிலெங்கோ

ஸ்வரங்கள்  ஒன்றுசேர

அதி  காலை வேளையில்

அமைதி தரும்  பொழுதில்

என்  நாவில்  வந்தது

பூபாள ராகம்.

 

அருணனின் உதயம்

மஞ்சள் நிற வானம்

மனதினை மயக்கிடும்

மலர்களின் தோற்றம்    

மங்கலம் பொங்கிட

வேறென்ன வேண்டும்

மனதில் எழுகிறதே

மணம் கமழும் இந்த

மலய  மாருதம்.

 

வானத்தில்  மேகங்கள்

அங்கிங்கு தென்பட

பருவ காற்றால்

அவை ஒன்றாய் சேர்ந்திட

மாமலைகள்  அதனை

தன்  மடிதன்னில் தாங்கிட

மனதுக்குள் புது வித

ஆனந்தம் பொங்கிட.

கார்  மேகங்கள் சூழ்ந்திட

இடி மின்னல் பொழிந்திட

முதல் துளி,

உழவன் மேலது தெளித்திட

அவன் மனம் குளிர்ந்திட  

புது மண்வாசம் கமழ்ந்திட  

பூமியில்,

பூ மழையாய்  பொழிந்ததே

அம்ருத  வர்ஷிணி போல .

 

இயற்கையில்  இதைப்போல

பல அழகு தோற்றம்

ஒவ்வொன்றுக்கும் ஒருவகை

ஸ்வரம் சேரும்  ராகம் .

இதை தந்த இறைவன்

கருணையின்  வடிவம்

இதற்க்காக அவனுக்கே

என் முதல் வணக்கம்.

 

 

சுந்தரேச்வரன்   Date:  4th Oct 2015     

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s