What is Life?

மண்ணில்  நாமிங்கு பிறந்து வளர்ந்தோம்

தாய் தந்தையருடன் உறவாடி  மகிழ்ந்தோம் 

மனைவி மக்களுடன் இன்பங்கள் பல கண்டோம்

இயற்க்கையில்  நாம் இங்கு பலதும் கண்டோம்

எடுத்தது லாபமா கொடுத்தது புண்ணியமா

என்றெல்லாம் கணக்குகள் பலதிங்கு  போட்டோம்.

 

எல்லாம்  அறிந்தோம் எல்லாம் அடைந்தோம்

நம்முடல் எரியும் இடம் வரை நாமிங்கறிந்தோம்.

இதுதான்  முடிவா முடிவின் தொடர்வா

இதனின் ரகசியத்தை  அறியவே  தவிக்கின்றோம்.

 

உயிரிங்கு மடிய 

உடல் மண்ணில்  தங்க

உடலுடன் ஒட்டிநின்ற

ஆத்மாவும்  வெளிசெல்ல

விண் வெளியில் வரையாத   

கோலங்களைப்போல்

அங்கிங்கும் அது செல்லும் 

என்று நாம் சொல்ல  

கடைசியில் வால்மீன்போல்

மறுபடியும்  பூமிக்கு திரும்புமோ?

இல்லை,

தெரியாத வேறுலகில் சென்றது  மறையுமோ?

இல்லை,

நெருப்பு பறவைபோல் மீண்டும்

வானத்தில் உயரமோ?

 

உறவெல்லாம்  இங்கே

உன்னால் அறியாத பொருளே

உயிருள்ளவரையில்தான்

உறவாட முடியும்

உயிரிங்கு பிரிய

உடல் மட்டும்  எரிய

உறவாடும்  பொருள்கள்

உன்பக்கம்  வருமோ?

 

உடல் பொருள் ஆவி  என மூன்றும்  இங்கே

ஒன்றுக்குள்  ஒன்றென்று நாமதை சொல்கிறோம்

ஒரு உடலுக்குள்  மறு  ஆவி செல்லலாமென்றும் 

நூல்களில்  நாமதை தெரிந்தும் இருக்கிறோம்.

இது  சாத்தியமா என்ற அறிவாற்றல் மனங்கள்

இதை ஏனோ இன்னும்  ஆராயவில்லை?

 

By  Sundareswaran  Date: 26th  September  2015

Today is my birthday

It may look funny to think about our end. But we have to. After reaching an age, the thinking can go haywire or it may be bizarre. But still we are sure it is going to happen one day. Never to get scared about that wonderful event, as I would like to call it like that.

எனக்காக நீ அழலாம் இயற்க்கையில் நடக்கும்

எனக்காக உணவு உண்ண எப்படி  நடக்கும்           என்று கவி அரசர் கண்ணதாசன் எழுதினர்.

 

என் முடிவைக்கண்டு நீ அழக்கூடும்

என்கூட  துணைக்காக யார் வரக்கூடும்

நமக்கெல்லாம் ஒரு எல்லை கோடிங்கு உண்டு  

அதை தாண்டி வருவோர்  யார் இங்கு உண்டு

இதைத்தானே உன்னிடம்  இந்த உலகம் சொல்வதென்றும்

 

அந்த இடம் ஓர் பெரும்  அருங்காட்சியகம்

அதில்   நம்  முன்னோர் முதியோர் பலபேர் உண்டு

இளையவர் முதியவர் என்று வாகுபாடில்லாமல்

எல்லோரும் அங்கே  உறங்குகிறார்  நன்று

எல்லோரும் அங்கே  உறங்குகிறார்  நன்று

 

By  Sundareswaran  Date: 26th  Sep 2015.  

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s