சங்கீத மாமழை

சங்கீத மாமழை

சுருதி சேர எங்கும் பொழியும்

அதில்  ச்ரிங்கார  பாவனை

லயத்தோடு நெஞ்சில்  நிறையும்

உல்லாசம் பொங்கிடும்

மனம் காற்றோடு சேர்ந்து பரவும்    

என்றும்  மாறாத நோய்க்கது

மாற்று மருந்தாக அமைந்திடும்

 

ஸ்வர  ஜதி  தாள லயம்

ஒரு சிலருக்கே  அது  வரம்

அதில்  சேர்ந்தவர்களெல்லாம்

இறைவனுள் சேர்ந்த ராகம்.

 

மொழிதந்த வாணீயவள் அதை

அமுதாய்  அவர்க்களிக்க

பரமனும் தன்,  முக்கலைகளையும் அளிக்க

அதை  கேட்க்க வே பார்க்க வே  நம்

காது  கண்களெல்லாம் சேர்ந்து 

உடல் உள்ளம்  எல்லாமதை

மெய் சிலிர்த்திட வைக்கும்.

மெய் சிலிற்ப்படைவதே

மாபெரும் பேரின்பம்

இறைவன் நம் பக்கம் கூட

இருக்கிறான்  என்பதை

காட்டுமொர்  பிரதிபிம்பம்

 

கலை  க்கூடங்கள் எல்லாம்

இறைவன் தந்த காணிக்கை

கலங்காத நீரினைப்போல்

என்றும்  அழியாத பொக்கிஷம்.

 

உலகம் பிறந்ததே சத்தத்தில்த்தான்

அந்த சத்தவும்  அன்றங்கு

ஒருவகை சங்கீதம்தான்

வேதங்களிலும் சங்கீதம்தான்

எந்த திருமறை சொல்வதிலும் சங்கீதம்தான்

வான் மேகங்கள் உறுமுவதிலும் சங்கீதம்தான்

வெறும்  காற்றலைகள் நீங்கவே

வருகின்ற சத்தவும்  சங்கீதம்தான்

பறவைகள்  கூவலும்  சங்கீதம்தான்

அவை தன்  இணையை அழைப்பதிலும் ச்ரிங்காரம்  தான்

அதன்  அங்க அசைவுகளிலும் சங்கீதம்தான்

அவையின் உயிர்மூச்சாய் திகழ்வதே

அவை செய்யும்,

தனித்தனி ,

ஒலி அலைகளில் வரும் இந்த சங்கீதம்தான்

யானை இடும் சத்தத்தில் சங்கீதமுண்டு 

சிங்கமதன் கர்ஜனையும் சங்கீதமே

வனவிலங்கின்,

சத்தங்களெல்லாம்

அவை அவையின் இணைக்கது  தெரிந்த சங்கீதம்தான்.

 

சங்கீத ஸ்வரங்கள்  இல்லாமல் போனால்

மற்று  சத்தங்கள் நம்மை அழித்திடக்கூடும்

சங்கீதமே  நமக்குத்தரும் பேரின்பமே

அது  இறைவன் வழி வந்த சௌபாக்யமே

சுந்தரேச்வரன் Date: 26th September 2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s