பாடவே நான் வந்து நின்றேன்

பாடவே வந்து நின்றேன்

உன்  கோயில்  வாசலிலே

 

பாடவே வந்து நின்றேன்   

உன்  கோயில் வாசலிலே

ஐங்கரனே என்றும் என்னை

காத்தருள்வாய் நீ.

 

தடைகள் எல்லாம் நீங்கும்வண்ணம்

அருள் தருவாய்  நீ.

என்றும்  நலன்களே இங்கு காணவேண்டும்

என்றருள் புரிவாய்  நீ.

 

ஏது ராகம் ச்ருதி  தாளம்

என்றறியாமல்

ஏதோ    வீணை ஒன்றில்

பொன்னிழைகள் மீட்டக்கேட்க்க  

நானும்  பாடுகின்றேன். 

 

முன்னுரை அதை  நீயே தந்தாய்

நானும்  நினைக்கையிலே

முடிவுரையும் நீயே தருவாய்

தடங்கல் இல்லாமலே.

 

நீல வான் வெளியில்

நீந்திடும் வெண் மேகங்கள்

மறைந்த வேளையினில்

நீ வாழும்  கோயில் வாசலின்முன்

நடந்து நடந்து

இங்கு உன்னை    தேடி வந்தணைய

பூர்வ ஜென்ம புண்ணியமோ  அது

அதை  நான் அறியேன்

உன்னில் வந்து  நான் அடைய

தவம் என்ன செய்தேனோ

 

புது மழை பொழிய

மண்ணில்  புது மணம் கமழ

அது வழி வந்த 

புது தென்றல் அதில் வீச

அதனால் பரவும் சுகந்தமதில்   

என் மனம்  மயங்க 

நானும்  நின்று  யாசிக்கின்றேன்  

உன் வாசலில் வந்து

அந்த அமுத சுரபி ராகமதனை

என்றும் உன் வாசல் வந்தென்னை

பாட மட்டும் அனுமதிப்பாயா ?

 

பாடவே வந்து நின்றேன்

உன்  கோயில்  வாசலிலே

ஐங்கரனே என்றும் என்னை

காத்தருள்வாய் நீ.

 

தடைகள் எல்லாம் நீங்கும்வண்ணம்

அருள் தருவாய்  நீ.

என்றும்  நலன்களே இங்கு காணவேண்டும்

என்றருள் புரிவாய்  நீ.

 

சுந்தரேச்வரன்  Date:  16th  September 2015

 

Courtesy:  Lyric:  “Paadvaanaai vannu  ninte Padivaathilkkal’

Lyricist:  ONV Kurup Sir    Film:  EzhuthaappurangaL (Unwritten pages)

Music:  Vidhyadharan    Raagam:  HAMSADHWANI

Thanks for the inspiration to translate in Tamil with changes.

Tomorrow is Vinayak chathurthi.  It is the Lord Ganesa who helped me in finding this song.

Please link with http://www.youtube.com/watch?v=RRhZQp0m0fQ.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s