நான் உன்னில் சரணடையும் பொழுது

எவ்விதம் கதிரவனின் வெப்பத்தால் உருகுகின்ற  உடம்புக்கு

மரக்கிளைகள்  நிழல் வழங்கின்றதோ

அதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது

நான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா  

 

கவலைகளால் என் மனம்  ஊஞ்சல்போல் ஆடிட

ஆதரவுக்காக  நான் நிலை தேட

அலைமோதும் கடலில் கரைகாணா நிலையில்

தத்தளிக்கும் தோணிபோல் நான் தவிக்க

அந்த தோணிக்கும்  கரைசேர  ஓர் திரைவந்து  உதவ

அதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது

நான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா  

  

சுடுகின்ற நெருப்பும் சந்தனம்போல் குளிரும்

ராகவா உன் கிருபையில்  எல்லாம்

ராகவா உன் கிருபையில்  எல்லாம்

அமாவாசைபோல கரிபோன்ற இருளும்

உன் மலர்முகம் காண பௌர்ணமியாய் திகழும்

பாலைவனங்கள் மழைநீர் விழுகையில்

தன் தாகம் தீர்த்திடும்போல்

அதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது

நான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா  

 

எவ்வழியில் சென்றால் உன்னை  நான் காணமுடியும்

அவ்வழியில்  நான் வர தயார் இங்கே

அதில்  பூக்கள் இருந்தாலும்  முள்ளாய் நிறைந்தாலும்

நான் மனம் தளரமாட்டேன்

தண்ணீருக்காக தாகிக்கும் உயிருக்கு

விதியால் மனம் நிறையும்வரை அமுதுண்ணும் வாய்ப்பினைப்போல்

அதைபோலொரு நிம்மதி என் மனதிற்க்கும் கிடைக்கின்றது

நான் உன்னில் சரணடையும் பொழுது, என் ராமா  

 

சுந்தரேச்வரன் Date: 17th Aug 2015

 

Since two days my mind was in a whirlpool of worries and I was in a fix as to what to do. When I heard this song, my mind got cooled. After translating this melody in Tamil, I am much better now. My mind is quite comfortable now.

 

Courtesy:  Lyric: “Jaise suraj ki garmi se jalte hue tan ko

mil jaye taruvar ki chhahyaa”

Lyricist: Ramanand Sharma    Music:  Jaidev Verma  Film: PARINAY(1974)

Thanks for the inspiration.

  

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s