மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்

மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்
என் வாழ்வில்,
விழிவைத்திருப் பேனென்று,
நீ சொன்ன வார்த்தையும்
மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்
என் வாழ்வில்,
விழிவைத்திருப் பேனென்று
நீ சொன்ன வார்த்தையும்.

விரும்பும் இடத்தில்
நீ இருந்தாலும்
வாழ்நாள் முழுதும்
நான் உன்னை நேசிப்பேன்
விரும்பும் இடத்தில்
நீ இருந்தாலும்
வாழ்நாள் முழுதும்
நான் உன்னை நேசிப்பேன்

உன்னை மறக்க முடியுமா
நீயும் என்னுடன் சேர்ந்த உயிரல்லவா.

மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்
என் வாழ்வில்,
விழிவைத்திருப் பேனென்று
நீ சொன்ன வார்த்தையும்

என் காலடிகள் எங்கெல்லாம் பதிந்ததோ
அங்கெல்லாம் நண்பர்கள்
என்னை வரவேற்றனர்
என் காலடிகள் எங்கெல்லாம் பதிந்ததோ
அங்கெல்லாம் நண்பர்கள்
என்னை வரவேற்றனர்
காலம் அவர்களை வரவேற்றதும்
என்னை அவர்களும் மறந்தனர்

என்னை அழவைத்து அழவைத்துத்தான்
பருவங்களும் எனை விட்டு சென்றது.

மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்
என் வாழ்வில்,
விழிவைத்திருப் பேனென்று
நீ சொன்ன வார்த்தையும்

இன்றெல்லாம் என் கண்களில்
பகல் கூட இருள் சூழ்ந்த இரவுகள்
இன்றெல்லாம் என் கண்களில்
பகல் கூட இருள் சூழ்ந்த இரவுகள்

என் நிழல்தான் என் தோழன் அன்றுமே
என் நிழல்தான் என் தோழன் இன்றுமே.

மறைந்ததெங்கோ அன்னாட்க்களும்
என் வாழ்வில்,
விழிவைத்திருப் பேனென்று
நீ சொன்ன வார்த்தையும்.

வாழ்க்கை ஒருவகை காத்தாடி
மேல் கீழ் பறக்கும் காற்றினால்
வாழ்க்கை ஒருவகை காத்தாடி
மேல் கீழ் பறக்கும் காற்றினால்

நானும் இன்றிங்கொரு கூத்தாடி
மேல் கீழ் பறக்கிறேன் கயிற்றினால்

என் வாழ்வும் இங்காடுது ஊஞ்சலில்
என்னாகுமோ அடுத்த வேளையில்
என் வாழ்வும் இங்காடுது ஊஞ்சலில்
என்னாகுமோ அடுத்த வேளையில்
முகத்தில் சிரிக்கின்ற மூடியிட்டு
மனதில் அழுகின்றேன் நானுமிங்கே
என் கண்களில் வருகின்ற நீரினைத்தான்
வெளியுலகில் பார்ப்பவர் யாருமில்லை
வெளியுலகில் பார்ப்பவர் யாருமில்லை

என் இதையம் இங்கொரு கடல்போன்றது
அதில் நண்பர்கள் வரும் போகும் அலைபோன்றது
என் இதையம் இங்கொரு கடல்போன்றது
அதில் நண்பர்கள் வரும் போகும் அலைபோன்றது
எப்பொழுதும் என்னுடன் இருப்பார்கள்
எப்பொழுதும் என்னை விட்டு செல்வார்கள்

என்றும் அலைமோதும் என் வாழ்விலே
என்னுடன் இருப்பவர் யார்தானோ ?
என்னுடன் இருப்பவர் யார்தானோ ?

சுந்தரேச்வரன் Date: 5th July 2015 By Sundareswran Date: 5th July 2015

Courtesy: Lyric: ‘Jaane kahaan gayE wo din
Lyricist: Hasrath Jaipuriji Film: Mera Naam Joker Singer: Mukesh Da Raag: Shivranjini
A heart rending song and one of the best songs of Mukesh Da.
Thanks for the inspiration to translate in Tamil with a few addition of final lines.
Please link with http://www.youtube.com/watch?v=Q9ULWBTokzw
I am remembering still the melody of Lathaji ‘ Kahin deep jale Kahi din” in Bees Saal Baad.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s