குழந்தைக்கால கனவுகள் ஓர் இளம் பெண்ணின் கண்ணோட்டத்தில்

“என் கிராமத்தை இவ்வளவு வருடங்களுக்கப்புறம் நான் பார்க்கிறேன்.
என்ன எளிமை, என்ன பசுமை. நான் பார்ப்பது நிஜமா கனவா?
என் குழந்தைக்காலம் திரும்புமா?”

இனிக்கின்ற குழந்தை கால கனவுகளென்
ஒளி நிறைந்து கண்களில் பளிச்சிடுதே.
இனிக்கின்ற குழந்தை கால கனவுகளென்
ஒளி நிறைந்து கண்களில் பளிச்சிடுதே.

கார்மேகங்கள் தலைமேல் சுற்ற
இடி மின்னல் வந்திங்கு தாக்க
என் இதையம் அதைக்கண்டு நடுங்கும்
அந்த குழந்தை பருவத்தை இழந்தேன்

இன்று, நெஞ்சுக்குள் வருகின்ற இன்னல்களை
தீர்க்க, மீண்டும்தான் திரும்பாதா குழந்தைக்காலம்?

வெகு தூரமெங்கோ பாடும் குயிலோசை
கேட்க்கவெ ஒருகணம் மனமிங்கு நிற்க்கிறதேன்?
நான் வெட்க்கத்தில் என்னையே இழந்தேன்
இங்கு பூக்களில் வண்டினம் மொய்க்க.

இளம் தென்றல், என் இதையத்தை மீட்டுகையில்
நான் அதை தடைசெய்ய விரும்பலாமோ?

அன்று தோழர்கள் தோழியர் சென்று
ஆற்றினில் நீந்தி குதித்து மகிழ்ந்தோம்
ஆலமர நிழலின் கீழே
ஆடுபுலி ஆட்டமாடி மகிழ்ந்தோம்
என்னில் பருவத்தால் வந்துள்ள மாற்றத்தால்
அ குழந்தைகால பருவத்தை நான் இழந்தேன்

இன்று, நெஞ்சுக்குள் வருகின்ற மயக்கங்களை
தீர்க்க, மீண்டுந்தான் திரும்பாதா குழந்தைக்காலம்?

இனிக்கின்ற குழந்தை கால கனவுகளென்
ஒளி நிறைந்து கண்களில் பளிச்சிடுதே.

சுந்தரேச்வரன் Date: 21st June 2015
Courtesy: Lyric: “Sapne suhaane ladakpan ke,mere nainon mein dOle bahaar banke”
Lyricist: Sahir Ludhiyanviji Film: Bees Saal Baad Music: Hemanth Da
Thanks for the inspiration to translate in Tamil with the same tune and tempo.

Please link with http://www.youtube.com/watch?v=ByDc8LfkwNk

இப்படிக்கூட வரிகளை சேர்த்திருக்கலாமோ?

அன்று தோழர்கள் தோழியர் சென்று
ஆற்றினில் நீந்தி குதித்து மகிழ்ந்தோம்
ஆலமர நிழலின் கீழே
ஆடுபுலி ஆட்டமாடி மகிழ்ந்தோம்

என்னில் பருவத்தால் வந்துள்ள மாற்றத்தால்
அ, குழந்தைகால பருவத்தை நான் இழந்தேன்

வண்ண வண்ண பட்டாம் பூச்சி
பூக்கள்மேல் சுற்றிடக்க்காண
அதை பிடிக்க முயன்றிடும் போது
அது பறந்து செல்வதை ரசிப்போம்

வானத்தில் பறந்திடும் பறவைகள்போல்
பறந்திட நானும் ஆசை வளர்த்ததுண்டு.

பச்சை பட்டாடை புல்மேடை
அதில் ஒட்டிநிற்கும் பனித்துளிகள்
அதை மொத்தமாய் அள்ளிடும் வேளை
அது நீர்த்துளியாகிட ரசிப்போம்
இந்த வெளிப்படை குறும்பை செய்யும்
அந்த குழந்தைக்காலத்தை நானிழந்தேன்

முத்துமணிபோல், ஒன்றொன்றாய் சேர்த்தவையை
நூலில் மாலையாய் கோர்த்திட நினைத்ததுண்டு.

இன்று, நெஞ்சுக்குள் வருகின்ற ஆசைகளை
தீர்க்க, திரும்பாதா
மீண்டும் அந்த குழந்தைக்காலம்!

இதில் வரும் முதல் ஆறு வரிகளை நான் பாட்டுடன் சேர்த்துள்ளேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s