லா லா ல லா லா ல
ஹும் ஹும் ஹும், ஹும் ஹும் ஹும்
ராகத்தில் நீ சொன்னாய்
குயிலோசைபோல.
காதோடு காதோரம்
தேனூறும் மந்த்ரங்கள்
ராகத்தில் நீ சொன்னாய்
குயிலோசைபோல
காதோடு காதோரம்
தேனூறும் மந்த்ரங்கள்
ராகத்தில் நீ சொன்னாய்
குயிலோசைபோல
உயரும் கதிர்க் குலையில்
மெல்ல மெல்ல தன்
பால் மணிகள் வளர்ந்து வரும்போல்
வெய்யிலின் ஒளிபட்டு
நெல்மணிகளாய் விரிந்து
காற்றில் அசைந்தாடுவதுபோல்
அழகே நீயும் இங்கு குறுகி குறுகி
உள்ளில் நாணத்தால்
தயங்கி த்தயங்கி நிற்கவே
மனதை குளிரவைக்கும்
நறுமணம் கமழும் அழகே நீயும்
என்னருகில்
நடந்து நடந்து வருவாய்.
யாரோ பாட பெய்கிறதே
இங்கு தேன்மழையும்
மண்ணை பொன்னாக்கும்
மந்த்ரம் நீ சொன்னாய்
மண்ணில் விளைந்ததே பொன் கனிகள்.
காதோடு காதோரம்
தேனூறும் மந்த்ரங்கள்
ராகத்தில் நீ சொன்னாய்
குயிலோசைபோல
கதிர்களும் காயும் நேரம் வரும் தன்னில்
பச்சை மணிகளால் மாலை கோர்க்கும்
பருவம் வந்ததும் பவழ மணிகளாய்
முத்துதிரும்போல் மண்ணில் சிதறும்
குளிர்த்தென்றலும் சோலை மலர்களும்
என்னில் இன்ப மயக்கங்கள் சேர்க்கும்
குளிரும் என் மனதில் வேறு ஓர் மாலை
என் இதையம் தழுவி சேரும்
மனதை குளிரவைக்கும்
நறுமணம் கமழும் அழகே
நீயும் எந்தன் அருகில் வா.
யாரோ பாட பொழிகிறதே
இங்கு மலர் மழைகள்
மண்ணை பொன்னாக்கும்
மந்த்ரம் நீ சொன்னாய்
மண்ணில் விளைந்ததே பொன் கனிகள்.
காதோடு காதோரம்
தேனூறும் மந்த்ரங்கள்
ராகத்தில் நீ சொன்னாய்
குயிலோசைபோல
சுந்தரேச்வரன் Date: 11th June 2015
Courtesy: Lyric:”KaathOdu kaathOram thEn chorumaam manthram”
Lyricist: O N V KURUP Music: Bharathan Film: KaathOdu KaathOram Singer: LATHIKA
This song is set to raga: Brindaavana Saaranga
The lyric is enriched with deep rooted Malayalam literature. The second and third stanza made me ponder over several times to get a feel of the exact in depth meaning in it. Kudos to ONV Sir. Lord Ganesa helped me to get a meaning and suitable Tamil words. Thanks for the inspiration to translate in Tamil without losing the raga, bhaava and tempo.I have added few lines to suit the Tamil version.
A very good film, but with a tragic end. Then the life begins for the hero with her child and his journey continues.
Please link with http://www.youtube.com/watch?v=rnzjzW5XAis to listen to the Malayalam song