ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ

This song can be choreographed in the following style.
The ambience is a picturesque rocky hill. The heroine sits and says the first word ‘Raagam’ in whispers. She listens to the echo. She gets thrilled. She tells the next words ‘puthu raagam’ and she is very happy and gets up.
When she starts again with “Raagam puthu raagam, she hears from a far away point, the hero’s voice”athu manathil ezhunthathO’.
Then all starts again and the song continues.

ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்
ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்

ராக தாளம் சேர சங்கீதமானதோ
நமக்குள் ஆசை வளர அதுவேதான் இடையில் வந்ததோ
அது என்றும் தொடருமோ
அது என்றும் மலருமோ
ராகம் ராகம்

ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்

புது வீணை உன்னை மீட்ட ஏழு ஸ்வரங்கள் போதுமோ
அதை மீட்ட மீட்ட இங்கு கான கங்கை ஒழுகுமோ
சுப யோகம் மலருமோ
புது ராகம் தோன்றுமோ
ராகம் ராகம்

ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்

ஜீவ நதிகள் இரெண்டும் இங்கு ஒன்று சேருமோ
அலைகள் ஓய்ந்திடாமல் என்றும் இந்த மண்ணில் தங்குமோ
ஆசை வெள்ளம் பெருக அது கடலாய் மாறுமோ
அது நம் தாகம் தீர்க்குமா
வாழ்வில் இன்பம் சேர்க்குமோ
ராகம் ராகம்

ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்

கங்கை நதிபோல் வந்து உன் தோளில் சாய்ந்தெனோ
அது மெள்ள மெள்ள வந்து என் மடியில் தவழ்ந்ததோ
மடியில் தவழ்ந்த பின்னே அதுவே உன் நெஞ்சில் கலந்ததோ
அதில் மனம் குளிர்ந்ததோ
புது சுகம் அறிந்ததோ
ராகம் ராகம்

அந்த சிவனும் கூட கங்கையை
தன் தலையில் தான் சுமந்தான்
ஆனால் இந்த கங்கையை நான்
என் நெஞ்சில் என்றும் சுமப்பேன்
சுமப்பேன்
ராகம் புது ராகம் அது மனதில் எழுந்ததோ
அந்த நாதம் அந்த லயமும் நம்மை ஒன்று சேர்த்ததோ
ராகம் ராகம்

சுந்தரேச்வரன்
By Sundareswaran Date: 22nd May 2015

Courtesy: Lyric: “Raagam puthu raagam” Solo singer: SPB
From the Tamil film: ”Nenjil Oru MuLL”
Courtesy: Lyric: “ Raaga anuraaga subhayOga Seride” Kannada Song
From the film: Sannadi AppaNNa Singers: Dr. Rajkumar and Janaki
The film was a box office hit and it was the Shehnaai maestro Bismillah Khaan who gave the musical melody to Dr. Rajkumar’s action on the Shehnaai which he endorsed it with appreciation.
Though I do not know Kannada, I could still take out few lines from it and few from the Tamil version, mix and concoct and add few lines and words of mine as well and generate a new recipe. That is what the ‘new avatar’ as above is. Thanks for the inspiration.
The music by GKV is enriched with different raagaas. In the Tamil version also he has scored the music.

Leave a comment