வருவாய் நீ அழகுதிரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்
வருவாய் நீ வளர்ந்துவரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்
மனதுக்குள்ளிருக்கும் இசைக்கருவி
ஸ்ரீராகமாய் அதை பொழிவாய் நீ
மனதுக்குள்ளிருக்கும் இசைக்கருவி
ஸ்ரீராகமாய் அதை பொழிவாய் நீ
மணமேடை ஒன்றமைப்பாய் யமுனா தீரம் தன்னில்.
வருவாய் நீ அழகுதிரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்
ஒவ்வொரு, ஸ்வர மொட்டுகளும், துளிர்விடும் ஏதோ இரவு நேரத்தில்
பனியின் , குளிரில் என்றும், மனதை மௌனமாக்கும் காஷ்மீரத்தில்
ஒவ்வொரு, ஸ்வர மொட்டுகளும், துளிர்விடும் ஏதோ இரவு நேரத்தில்
பனியின் , குளிரில் என்றும், மனதை மௌனமாக்கும் காஷ்மீரத்தில்
மலர்க்கொடி ஊஞ்சலாடும் ஓர் வள்ளி குடிலுக்குள்
உடல் உள்ளம் தழுவிடும் கீதமாவையா ?
மலர்க்கொடி ஊஞ்சலாடும் ஓர் வள்ளி குடிலுக்குள்
உடல் உள்ளம் தழுவிடும் கீதமாவையா ?
தங்க த்தேரில் வரும் மாயப்பெண் எனக்கு திராட்சை ரசம் நீ தருவாயோ ?
தங்க த்தேரில் வரும் மாயப்பெண் எனக்கு திராட்சை ரசம் நீ தருவாயோ ?
வருவாய் நீ அழகுதிரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்
Raagini hai thum chandmaa mein, pyaar mein kho gayaa shaajhaan mein
தென்றலின் , தாமரைக் கரங்களால், ஏழை மேகத்துக் களிக்கும் நச்சத்திரங்கள்
யாரோ காதலன் வந்து , அவளைத்தேடி ,அவள் தலையில் அணிவிக்கும் மணி மகுடம் தானோ
தென்றலின் , தாமரைக் கரங்களால், ஏழை மேகத்துக்களிக்கும் நச்சத்திரங்கள்
யாரோ காதலன் வந்து , அவளைத்தேடி ,அவள் தலையில் அணிவிக்கும் மணி மகுடம் தானோ
அழகுக்கு அழகூட்டும் அழகே உனக்கு நெற்றியில் அழகான பொட்டொன்று வைக்க
அழகுக்கு அழகூட்டும் அழகே உனக்கு நெற்றியில் அழகான பொட்டொன்று வைக்க
நறுமண சந்தனத்தை கேட்க்கின்ற பொழுது
பூரண கும்பமே ந்தி , தங்கவளையல் போட்டுவரும் ,உன் தங்கக்கை விரல்களுக்கு
ஓர் முத்துமணி மோதிரமாய் என்னில் வா நீ.
வருவாய் நீ அழகுதிரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்
மனதுக்குள்ளிருக்கும் இசைக்கருவி
ஸ்ரீராகமாய் அதை பொழிவாய் நீ
மணமேடை ஒன்றமைப்பாய் யமுனா தீரம் தன்னில்
ஏதோ, கனவுலகில் நீ, தனிமையில் உனை மறந்து செல்கின்றாயோ
யாரோ ,உன்னழகை ரசித்து , உன் பின்னால் உன்னுடன் வருகின்றாரோ
ஏதோ, கனவுலகில் நீ, தனிமையில் உனை மறந்து செல்கின்றாயோ
யாரோ ,உன்னழகை ரசித்து , உன் பின்னால் உன்னுடன் வருகின்றாரோ
தினம் தினம் வளர்ந்து நீயும் முழு வெண்ணிலவாய் மாற
உன்னையே நாடி வரும் தேவனை அறிவாய்
தினம் தினம் வளர்ந்து நீயும் முழு வெண்ணிலவாய் மாற
உன்னையே நாடி வரும் தேவனை அறிவாய்
உன்னில் உயிரூட்டும், உன்னில் ஒளியூட்டும் , உன்னைவிரும்புமவன் சூரிய தேவன்தான்
உன்னில் உயிரூட்டும், உன்னில் ஒளியூட்டும் , உன்னைவிரும்புமவன் சூரிய தேவன்தான்
நாடி அவன் வருகையிலே நாணத்தில் தலை குனிந்து நின்றுவிடாதே
தங்கத்தேரிலவன் உன்னை எடுத்து செல்ல
வானம் வண்ணமலர்கள் தூவி வழியனுப் பாதோ ?
வருவாய் நீ அழகுதிரும் வெண்ணிலாவே
ஷாஜஹான் தீர்த்துவைத்த அழகு பூமியில்……………
சுந்தரேச்வரன் Date: 1st May 2015
Courtesy: Lyric: ‘POru nee vaariLm chandralEkhE,Shaajahaan theerthoree rangabhoovil”
This song is more or less akin to an old Hindi song ”Aadhaa hai chadru maa raath aadhi’ written by Bharath vyaas for the movie Navrang by V Shatharaam. The dance scene of Sandhya with 15 mud pots on her head was a great thing at that time.
I think our Malayalam lyric is set to raag Malkhouns.
No idea who has written this nice lyric and who has scored the music. Kudos to them. Recently while watching the movie ‘Kaashmeeram’, I heard this song. The music and the choreography are superb. I tried to get the lyric in various sites, but didn’t.
I had to listen to the voice of the Mrs K.S Chithra repeatedly for about 10 to 15 times stopping at various stages to decipher the words. Still at one spot where she says Raadhe I tried many times, but failed. Then I decided to use my own while translating this in Tamil without losing the tempo.
The musical rhythm of the drum, tabla and the band and also the jerky words like OrO, manjin, kaattin, aaro at the beginning of different lines had indeed made my neck to move forward and backward and this inspired me to add one of my stanza as the last one.
“Etho, swapnalokathil neeyum,thanichaai ninne marannu neengunnuvO
Aaro, nin azhagil mayangi, nin pinnaal ninnudan varunnudO” ,thus the lines flow.
Please listen to the original in Malayalam by linking with http://www.youtube.com/watch?v=zsEFK2IRiNg
As a first measure, I dedicate this song to Lord Ganesa who helped me to find the words. My obeisance to Him.
கண்கண்ட கடவுளே வினாயகனே
கண்கண்ட கடவுளே வினாயகனே
என் கண்ணுக்குள் கண்ணாக வீற்றிருப்பாய் நீ
அறிவின் ஆரம்பம் நீயே ,எங்கும் நிறைந்தவன் நீயே
உன்னை நான் வணங்கிறேன் மனதுக்குள்ளே
என்னை நீ அருள்வாய் என்ட்றேன்றுமே
ஏதோ ,கனவில் மிதந்தேன் ,ஏனோ எங்கோ விழித்திருந்தேன்
நல்ல, வார்த்தைகள் கிடைக்க ,என்னில் நானே கொதித்திருந்தேன்
முக்கண்ணனின் முதல்வனே என் முன்னால் வந்து நிற்க்க
முன்னுரை அவனே சொல்லிவைத்தான்
தொடர்ந்தே நான் எழுத வார்த்தைகள் என் முன் குமிய
முடிவுரை அவனே தந்தான் .
என்னை ஆளுபவன், என்னுடன் இருப்பவன்
என்னுள்ளில் எப்பொழுதும் இருக்கின்றான்
அவனுள்ளில் நான் எப்பொழுதும் வாழ்கின்றேன்
சுந்தரே ச்வரன் Date: 1st May 2015