கரு வளரும் இரகசியம் ( கரு புராணம் )

“இறைவன் அருளும் இயற்க்கையும் சேர
விந்துவும் முட்டையும் ஒன்றாய் சேர
காலம் காலமாய்
உயிரினங்கள்க்கெல்லாம்
பூமியில் நடக்கும்
கருத்தரிக்கும் நாடகமே
பிறவி என்றோர் அனுபவமே
வாரீசுகளின் வரிசைகளே”

ஆரம்பம் அது தண்ணீர் குடமொன்றமைய
பிறக்கும் கருவுக்கு மெத்தையாய் அமையும்

ஓராம் மாசம் கண்ணது வளரும்

ஈராம் மாசம் கைகால் காதது முளைக்கும்

மூணாம் மாசம் பல்லது வளரும்

நாலாம் மாசம் கண்ணிமை,புருவம் ,நகம் ,முடி வளரும்

ஐந்தாம் மாசம் கரு அங்கிங்கு நீங்கும் நிலமை தெரியும்

ஆறாம் மாசம் தோலது சிவக்கும் ,நரம்புகள் தெரியும்

ஏழாம் மாசம் கேட்க்கும் திறமை துவங்கும் ,தொட்டால் சிணுங்கும் ,வலி தெரியும்

எட்டாம் மாசம் மூளை வளரும் ,பார்க்கும் கேட்க்கும் திறமை வளரும்
வளர்ந்தும் வளராத நிலைமை இதுவே

ஒன்பதாம் மாசம் ஐம்புலன் அமையும் ,கண் சிமிட்டும் ,தலை திருப்பும் ,விரல் மடக்கும் ஒளி ஒலி புரிந்துகொள்ளும், மூச்சுப்பைகள் வளர்ந்துவரும்

ஆணென்றால் அதில் ஆண்குறி முழுமை வளர்ச்சிபெறும்
பெண்ணென்றால் அதில் பெண்குறி முழுமை வளர்ச்சிபெறும்

வளர்ந்து வருகையில் இடமில்லாமல் வெளிவரத்துடிக்கும்
கீழ்மேல் தவழும்
தலைகீழாய் தொங்கும்

பத்தாம் மாசம் கருவறை திறக்க
கருவாய் இருந்தது
முதல் தலை வெளிவர பின் கால் வெளிவர
குழந்தையாய் பிறந்ததும் தொப்புள் கோடி விடுபடவே
தாய் வேறென சேய் வேறென பிரிய
முதல் மூச்சதுவிட்டு குஆ குஆ வென கத்தும்

இப்படி சுமந்தவள் தவிக்கும் மாதங்கள் பத்து.

KUAA KUAA means where am I where am I, the first call of the new born child and not the first cry, as it is helpless on this earth.

Thaayum athanai than nenjOdaNaikka
Nee inguLLaai nee InguLLaai
En nenjukkul endrumE neeyuLlaai endru
Surakkum muthalppaalai athukku pukatta
AananthakkaNNeeraal athan siram thazhuva
PEsaamal pEsiyE atharkkathai viLakkuvaal.

தாயும் அதனை தன் நெஞ்சோடணைக்க
நீ இங்குள்ளாய் நீ இங்குள்ளாய்
என் நெஞ்சுக்குள் என்றுமே நீயுள்ளாய் என்று
சுரக்கும் முதல் பாலை அதுக்கு புகட்ட
ஆனந்த கண்ணீரால் அதன் சிரம் தழுவ
பேசாமல் பேசியே அதற்க்கதை விளக்குகிறாள் .

சுந்தரேச்வரன்

Date: 24th April 2015

ORGANOGENESIS என்ற கட்டுரைக்கு தமிழில் விளக்கம் கேட்டதற்க்கு நான் எழுதிய பதில்.
இதற்க்கு சிவபுராணத்தில் விளக்கங்கள் இருக்கிறதை ஆராயவேண்டுமாம்.

உலகில் உயிர்களில்லாத காலத்தில் பகவான் விராடரூபத்தில் பிரபஞ்சத்தை சுத்திவரும் காலத்திலிருந்திதனை ஆராயவேண்டும்……………..

The final stage:
As baby passes through the birth canal, it receives a bath of beneficial microorganisms that charge up the immune system.
Baby born by c-section does not receive this ‘first inoculation’. They are born more susceptible to autoimmune diseases and pulmonary conditions.
(Courtesy: Times of India Chennai edition dated 29th April 2015. Section Chennai Times Page 4
Health Capsule by Michael A Petit MD)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s