அழகே சுவைதரும்

Male: அழகே சுவைதரும் உன் உதடோரம்
ராகமலர்களாய் விரிந்ததிங்கு
அதில் ஊறும் அறுசுவை தேனை பருக
காதல் வண்டாய் பறந்தேன் , நான் பறந்தேன்

Female: நறுமணம் கமழும் பூ செடி கொடிகள்
நமக்காய் மேடை அமைத்ததிங்கே
Male: வெட்கத்தில் விடரும் மாலை மலர்கள்
தென்றலில் தலைசாய்த்தாடுதிங்கே
Female: தென்றலில் தலைசாய்த்தாடுதிங்கே
ஆ,ஆ,ஆஆ……….
Male: ஆ,ஆ,ஆ,,ஆ………

Male: அழகே சுவைதரும் உன் உதடோரம்
ராகமலர்களாய் விரிந்ததிங்கு
அதில் ஊறும் அறுசுவை தேனை பருக
காதல் வண்டாய் பறந்தேன் , நான் பறந்தேன்

Female: தூக்கணாம் குருவிகள் தன் இணைக்குருவிக்காய்
கூடுகட்டும் இந்த மரங்களிலே
Male: நாம் இருவருமிங்கே தனிமையில் உறங்க
நவரத்தின மாளிகை தீர்ப்போம்
Female: நவரத்தின மாளிகை தீர்ப்போம்.
ஆ,ஆ,ஆஆ……….
Male: ஆ,ஆ,ஆ,,ஆ………

Male: அழகே சுவைதரும் உன் உதடோரம்
ராகமலர்களாய் விரிந்ததிங்கு
அதில் ஊறும் அறுசுவை தேனை பருக
காதல் வண்டாய் பறந்தேன் , நான் பறந்தேன்.

சுந்தரேச்வரன்
Date: 26th March 2015

Courtesy: Lyric: “Roopavathi nin ruchiraadharamoru’
Lyricist: Sri Kumaran Thambi Music: Devarajan Film: kaalachakram

Please link with http://www.youtube.com/watch?v=mP4tStfvaxM to listen the Malayalam version.

Thambi Sir, Thanks for the inspiration to translate in Tamil. A slight modification of the lines.

Poompodi nukaraan varunna chithrasalabhathe maatti, thE’n nukaraan varunna vandaakki

പൂമ്പൊടി നുകരാൻ വരുന്ന ചിത്രശലഭത്തെ മാറ്റി ,തേൻ നുകരാൻ വരുന്ന വണ്ടാക്കി.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s