வீணாய் ஏனோ அலைகின்றாய்

வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
தெய்வத்தை காணவா துடிக்கின்றாய் என்னாளும்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்

உன்னுள்ளில் நீ பாரு தெரிந்திடும் உன் எண்ணம்
உன் எண்ணம் எதுவோ அதுபோல் நீ காண்பாய்
உன்னுள்ளில் நீ பாரு தெரிந்திடும் உன் எண்ணம்
உன் எண்ணம் எதுவோ அதுபோல் நீ காண்பாய் .
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
தெய்வத்தை காணவா துடிக்கின்றாய் என்னாளும்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்

மதுரைக்கேன் போகிறாய் மீனாக்ஷியை பார்க்கவா
காஞ்சிக்கேன் போகிறாய் காமாக்ஷியை பார்க்கவா
உன் மனதில் நீ ஒருகணம் கேளிந்த கேள்வியை
உன் மனதில் நீ ஒருகணம் கேளிந்த கேள்வியை
வீணாய் ஏனோ அலைகின்றாய் என்னாளும் .

உன் முகத்தை நீ மறைக்கின்றாய் என்றுமே திரைபோட்டு
உன் மனதை நீ நிறைக்கின்றாய் பேராசை விஷ மூட்டி
உன் முகத்தை நீ மறைக்கின்றாய் என்றுமே திரைபோட்டு
உன் மனதை நீ நிறைக்கின்றாய் பேராசை விஷ மூட்டி
தெய்வத்தை காண்பாயா நீ அங்கு சென்றாலும்
தெய்வத்தை காண்பாயா நீ அங்கு சென்றாலும்
தெய்வத்தை காண துடிக்கின்றாய் என்னாளும்.

வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
தெய்வத்தை காணவா துடிக்கின்றாய் என்னாளும்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்

உயிரினங்கள்க் கெல்லாம் முடிவேன்பதுண்டு
வாழும் நாட்க்களுக்கதில் பேதங்களுண்டு
முடிவென்பதோ இறைவன் தீர்ப்பு
முன்னுரை முடிவுரை அவனிடம்தான்
நீயும் நானுமதில் நீர் குமிழிகள் தான்
காற்றால் ஓடும் தேகங்கள் தான்
வீணாய் ஏனோ அலைகின்றாய் என்னாளும்
தெய்வத்தை காணவா துடிக்கின்றாய் என்னாளும்

கள்ளம் இல்லா பிஞ்சு உள்ளங்களைப்பாரு
உன் உள்ளத்திற்கு தூய்மை அவையிடம் நாடு
கள்ளம் இல்லா பிஞ்சு உள்ளங்களைப்பாரு
உன் உள்ளத்திற்கு தூய்மை அவையிடம் நாடு
பள்ளங்கள் பலதுள்ள உன் உள்ளத்திலிருந்து
பள்ளங்கள் பலதுள்ள உன் உள்ளத்திலிருந்து
அந்த தீய எண்ணங்களை நீ அடியோடு அகற்று
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
.
தூய்மை அடைந்தபின் உன் உள்ளத்தை பாரு
தூய்மை அடைந்தபின் உன் உள்ளத்தை பாரு
உண்மையாய் தெய்வத்தை நீ அங்கு காண்பாய்.

வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்
தெய்வத்தை காணவா துடிக்கின்றாய் என்னாளும்
வீணாய் ஏனோ அலைகின்றாய் உலகெல்லாம்.

சுந்தரேச்வரன்
By Sundareswaran

Date: 30th January 2015.

This song is set to Raag: Baagesri or in Hidusthani it is Raag MALAGUNJI, a blend of Raagesri and Baagesri.
Again listen to an old Hindi song”Nain so nain nahi milavo” from film” jhanak jhanak paayal Bhaaje”.
Link with http://www.youtube.com/watch?v=jX7m86CMDIg to listen to the Hindi song.
Of course, I got the inspiration after listening to this film song.
In fact you can taste this raag in the good old Tamil song “ KaaNaa Inbam kaninthathEno” written by Ku. Ma. Balasubramaniam for the film: Sabhaash Meena. I have translated this song in English and have separately written four more stanzas for it in Tamil.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s