ஆர்.கே லக்ஷ்மண்

அனுதினம் நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை ஓர் சின்ன சதுரத்துக்குள் மிக ஹாஸிய வடிவில் படமாக வரைந்து அதை பாமர மக்களுக்கு கூட நன்று புரியும்வண்ணம் மிக சாமர்த்ய்மாக ஓர் தலைப்புடன் தெரிவிப்பதில் தலைசிறந்து விளங்கியவர் ஆர் கே. லக்ஷ்மன் என்ற நகை ச்சுவை சித்திர வடிவமைப்புக்காரர் . அறுபத்தைந்தா ண்டுகாலம் ஜனங்களை சிரிக்கவைப்பதிலும் சிந்திக்கவைப்பதிலும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அந்த மகான் . அவருடைய ஒவ்வொரு படத்திலும் ஓர் அறிவாற்றல் கலந்திருக்கும். அது அரசியலானாலும் சரி மற்றெந்த துறையானாலும் சரி . அதில் வரும் தலைப்பு ஈட்டிபோல் அந்த துறையை சான்றவர்களை போய் தாக்கும். படம் வரைக்கும்போது அவர்களின் அங்க வடிவமைப்புகள் அவர்களின் முகபாவங்கள் இதிலெல்லாம் நன்கு கவனம் செலுத்திய பிறகே அவர் முடிவெடுப்பார். அதற்க்கு அவர் உயிரோட்டம் கொடுப்பார். பெரிய கட்டுரைகளையும் புக்கர் மற்றும் நோபல் பரிசுபெற்ற புத்தகங்களை படிப்பதற்கு பாமர மக்களால் எட்டமுடியாத உயரத்தில் அதன் விலை இருக்கும்பொழுது இந்த சிறிய வரைபடத்தை படித்தாலே போதும் அறிவாற்றல் நன்கு வளர்வதற்கு .
அவர் நம்மைவிட்டு போனாலும் இறைவன் படத்தைக்கூட இந்த வடிவில் வரைத்து அவரைக்கூட சிரிக்க வைத்து அந்த உலகிலுள்ள அரசியலைக்கூட,நன்கு அலசுவார். இது உண்மையாக நடக்க போகிறது.
அவர் உயிர் துறக்கவில்லை. நம்முடன் இருப்பார். அவர் வரைந்த அத்தனை படங்களும் இன்றும் என்றும் உண்மையாகவே நம் நாட்டுக்கு பொருந்தியதாகவே இருக்கும். வரைபடங்கள் வாயிலாக நம்மை திருத்திக்கொள்ளவும் நாட்டை முன்னேறும் பாதையில் அழைத்து செல்லவும் அவர் பேசாமலே பேசிவிட்டார். அவர் பாதையை பின்பற்றுவோம் . நாட்டை சீரமைப்பதில் உறுதி எடுப்போம். இது அவருக்கு நாம் அளிக்கும் நன்றிக்கடன் ஆகும்.
அவர் ஆத்மா சாந்தி அடைய நாம் எல்லோரும் இத்தருணத்தில் பிரார்த்தனை செய்வோம்.
இப்படிக்கு அவர் வரைபடங்களை ரொம்பவும் விரும்பி பார்க்கும் ஓர் சாதாரண மனிதன்.
By sundareswaran Date: 27th January 2015

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s