கனவுக் கல்யாண அரஙேற்றம்

கண்ணுக்கழகான மாமா
பொண்ணுக்கலங்காரம் பண்ணலாமா
மாமன் பொண்ணுக்கலங்காரம் பண்ணலாமா
கல்யாணப் பொண்ணுக் கலங்காரம் செய்யலாமா?

முதலில் மஞக்காலை நாட்டி,
பிறகு பச்சைவாழைமரம் கட்டி
கூடவே தென்னங்காய்களும் சேற்த்து
நல்ல பந்தலொன்று போட்டு
தென்னங்கீற்றினாலழகாய்
தோரணங்களமைத்து
மாமா, நீயுமொரு
மேடையொன்றை அமைப்பாய்
கல்யாண மேடையொன்றை அமைப்பாய்.

இனிமேல்,என்னநடக்குமென்று
அழகாய் வரிசைப்படுத்திப் பாரு
என் மாமோய், நீயும் கொஞம்
கனவுலகத்தில் வாழு
கற்ப்பனைத் தேரிலேறு.

கண்ணுபடாதிருக்க கன்னத்தில்
கறுப்பு பொட்டொன்று வைக்கலாமா
பொண்ணுக்கு, முதலில்
பொட்டொன்று வைக்கலாமா?

கரிமிழியாள், கண்ணுக்கு மை தீட்டி
குழிவிழும் கன்னத்தில் மஞளைப் பூசிவிடு.
நெற்றியில் பொட்டுவைத்து,
கொஞம் சந்தனமும் சேற்த்து
வட்டமுகத்துக்கே, நல்ல
அழகை மெருகேற்று.
கன்னங்கறுச்செடையில்,வெள்ளை
முல்லப்புமாலையினால்
கொஞமும் இடைவெளிதெரியாமல்
நல்லா பின்னிப்பிணைத்துவிடு.
கூடவே செமந்தி கதம்பவும் சேரு
நாகரும், குஞ்சரமும், வைரத்தால்
பொன்னில்ப் பொதிந்துகட்டு
நெற்றிச்சுட்டியும் மறவாமல்
இத்துடன் சேற்த்துவிடு.
என்னென்ன மாலையுண்டோ,பொன்னில்,
அத்தனையும் சேற்த்தவளின்
கழுத்துக்கலங்காரமாய்ப் பூட்டு.

காதுகளில் கம்மலிட்டு, கூடவே
வைரத்தால் தோடுபோடு.
அவளின், மூக்கினழகிற்க்கு
சேற்ந்தாற்ப்போல் வைரத்தில்,
எட்டக்கல் பேசரி பொட்டுவிடு.
பட்டுப்புடவைகட்டி,அவளின்
ஒட்டிய இடைதன்னில்
பக்கப்பதியவேதான்,பட்டைபோல்
ஒட்டியாணமொன்றைக்கட்டு.
கைகள்க்கலங்காரமாய் நிறைய, பொன்னின்
வளைகளும் போட்டிடுவாய்.
மற்றவர் கண்படாதிருக்க,அதிநிடையில்
கறுப்பும் சிவப்புமாக,அங்கிங்காய்
குப்பிவளைகள் சேற்த்து
கைபூரா நிறைத்துவிடு.
பவிழநிறம்படைத்த அவளின்
பத்துவிரலுக்குமே,
பலவண்ண கல்பதித்த நல்ல
மோதிரம் போட்டுவைப்பாய்.
கால்கள் நடக்கையிலே, மணிசத்தம்,
ஜல்ஜல்லென்றொலித்திடவே
கண்ணகிபோட்டிருந்தாப்போல்,
காலில் தண்டை கலகலக்க
கூடவே, பொன்னின் அழகூட்டும்,
கொலுசையும் போட்டுவிடு.
கழுத்து நிறைந்திடவே,
பூமாலைகள் போட்டுவிட்டு,
ஆண்டாள் திருக்கோலமுடன் அவளை
அலங்காரம் செய்திடுவாய்.

மாமன் நீயும் கூடவந்திட,
பட்டுவேஷ்ட்டியுடன்
பட்டுச்சட்டையணிந்து,தோளில்
நல்ல உத்தரீயமணிந்து
சின்னகௌண்டர் பாணியில்த் தான்
தலைநிமர்ந்து நடந்திடுவாய்.

முகூற்த்த நேரம் நெருங்க
மாப்பிள்ளையும் நெஞ்சு நிமற்ந்து நிற்க்க
தந்தை தாயார்,கூடவே
உற்றோரும் மற்றோரும் சேர்ந்துநிற்க்க
மணப்பெண்ணும் தலை குனிந்தவண்ணம்
மெல்லன, மேடைக்கு நடந்துவர
மங்கல வாத்தியம் முழங்க
மந்திரங்கள் காதில் ரீங்காரமிட்டெழும்ப
மாப்பிள்ளையும் தலைநிமற்ந்துடல் குனிந்து
மணப்பெண்ணும் தலைகுனிய
கட்டினான் மாங்கல்யமும்
மனை வாழக் குலம் வாழ. என்று
எல்லோரம் அக்ஷதையிட்டாரகள்,

மணப்பெண் ஏழடிவைத்துவிட்டு, மாப்பிள்ளை
பெண்ணின்னிருகால், விரலில் தன்கைய்யால்
வெள்ளியில் மெட்டியும் போட்டுவைத்தான்.
திருக்கல்யாணம் முடிந்ததடா
மாபெரும் வைபோகம் அமைந்ததடா.

ஊராரெல்லாமங்கு உண்டுமகிழ, மாமனும்தான்
கனவில்
தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிவைத்தான்.
பெ ப்ப ப்பே டும் டும் டும் , டும் டும்
பி ப்பி ப்பி பி ப்பீ பீ அப்படிபோடு
பெ ப்ப ப்பே டும் டும் டும் , டும் டும்
பி ப்பி ப்பி பி ப்பீ பீ சுந்தரேச்வரன் Date: 19th June 2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s