(ராதையுடன் கண்ணனின் பொழுதுபோக்கு)
கண்ணனே காற்வண்ணனே
ஏனோ என்னிடம் இந்த
கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணனே காற்வண்ணனே
என் பின்னலை இழுப்பாய்
சேலையய் இழுப்பாய்
திரும்பும் முன்னமே
ஓடி நீ மறைவாய்
உன் விளையாட்டை
நீயே ரசிப்பாய்
என்னை நீயும்
அழவைத்திடுவாய் கண்ணனே காற்வண்ணனே
அவரறியாமல் நீ
முத்தங்கள் இடுவாய்
கன்னியரை நீ
கவர்ந்தே விடுவாய்
கோபிகளுடன் நீ
நற்த்தனமாட
உன்னையே நினைத்தவர்
உலகை மறப்பார். கண்ணனே காற்வண்ணனே
கோபம் கொள்ளாதெ
என்னுடன் நீயும்
தந்துவிடுகிறேன்
வெண்ணை நானும்
என் கைய்யைய் விடு நீ
கொஞ்சம் எட்டி, நில்லு நீ கண்ணனே காற்வண்ணனே
என் தோழிகளெல்லாம்
போய்விட்டார் இங்கு
தனிமையில் நானும்
நிற்க்கிறேன் இங்கு
கண்ணா நீ எங்கும்
சென்றுவிடாதெ
தனிமையில் என்னை
தள்ளிவிடாதெ கண்ணனே காற்வண்ணனே
கோபிகள் அனைவரும்
பார்த்தபேரெல்லாம்
வீணாக நம்மைப் பற்றி
பேசுவாரிங்கு
ராதையின் கைய்யைய்
பிடித்தானென்று
வீணுரையாடுவார்
அனைவரும் இங்கு கண்ணனே காற்வண்ணனே
உன் புல்லாங்குழலால்
கானம் இசைப்பாய்
மடுகள் கன்றுகள்
மெய்த்து நடப்பாய்
என் தெருவை விட்டு
சென்றிடு நீயும்
மாலைப் பொழுதில்
வந்திடு நீயும். கண்ணனே காற்வண்ணனே
உன்னையே நினைத்து
உருகும் நானும்
உன்னில் கலலந்திட
ஏங்கும் என்னாளும்
என்னை நீயும்
ஏற்றுக் கொள்வாயோ
இல்லையில் நீயும்
காற்றில் மறைவாயோ கண்ணனே காற்வண்ணனே
சுந்தரேச்வரன்
Date: 18th October 2014
Courtesy: lyric: Saavare’ Saavare’ Lyricist: Shailendraji and sung by Lathaji and music rendered by Pt. Ravi Shankerji Film: ANURADHA (1960)
A very quickly paced song and Lathaji sings in sync with the speed of the fast moving fingers in Sitar of Pt Ravi shanker ji.
A wonderful rendition in Bharavi. This can be choreographed into a fine dance form.
The song inspired me to translate into Tamil and I have added two stanzas to it.For some of the Hindi words I presumed the meaning must be like this and for some time I was at a loss as what I shall write for Saavare saavare. Lord Ganesha came to my rescue and as it was connected with Radha, He gave the correct words
I think these lines can be tuned with Sindhu Bhairavi.