பெண் வீட்டுக்கு விருந்துபோ (ன) கும் மாப்பிள்ளை

மரக்காணம் போறான்டா மாப்பிளை

கூடவே போறாடா பொம்பிளை

தேராட்டம் ஓடுகின்ற காறிலே

இதை வேடிக்கை பார்ப்போமடா நேரிலே.

அன்போடுதான் அவங்க கூப்பிட

வரசொல்லுவார் உங்களை சாப்பிட

இட்டலி சட்டினி வடையெல்லாம் சேர்ந்த

சொஜ்ஜி பஜ்ஜிதான்டா பலஹாரம்

கூட இனிப்பும் கொஞ்சம் கலந்திடவே

அதிரசமும் சேர்ந்த பணியாரம்.

ரொம்ப தின்னுப்புட்டா வந்திடும் விவகாரம்

அளவோடு தின்னவே அலங்காரம்.

காரசாரமான சாம்பார்

அதில் வெங்காயம் சேர்ந்துப்புட்டா ஓ! பார்

மணமணக்கும் எண்ணைவிட்ட உருளைக்கறி

இதையெல்லாம் சேர்த்து நீயும் ஓர் பிடிபிடி.

செம்பூவைப் போல் குறுக்கின பால்பாயசம்

முல்லைப்பூபோல் பொங்கும் பொன்னி அரிசியும்

கத்தியால் வெட்டினால் கிழியாத கட்டி தயிருமாய்

வெட்டொன்று துண்டிரண்டென்றொரு கை பாத்திடு.

ஆகமொத்தம் நீ போய் செய்யும் அமக்களம்

இதெல்லாம் மேளதாளத்தால் வந்த யோகமே

வாழ்க்கை முழுதும் நீ நல்லா வாழணும்

அவங்க வாழ்த்திடவே நீ கொஞ்சம் குனியணும்.

 

சுந்தரேச்வரன்

Date:  30th September 2014

 

A fun and frolicking piece of a song that can be sung like a folk lore. The situation is real but the characters are imaginary.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s