குடுகுடுப்பைக்காரன்

டுகு டுகு டுர்ர்ர்ர் ஜெக்கம்மா

கறுப்பக்கோட்டொன்றணிந்து

கரைவேஷ்டி ஒன்றை இடுப்பில் சுற்ற

தலையில் ஜரிகை வேஷ்டியால்

முண்டாசொன்று கட்டி

நெற்றியில் திருநீரணிந்து

அதற்க்குமேல் சந்தணப் பொட்டிட்டு

குங்குமத்தால் நாமமிட்டு

கண்களில் மைதீட்டி

கழுத்தில் பலமணிமாலைகள் அணிந்து

கூடவே ருத்திராக்ஷமும் சேர்த்து

கையில் கங்கணமிட்டு

காலில் சிலம்பணிந்து

கூடவே தன்னுடைய பொக்கிஷம்

குடுகுடுப்பைக்கு அழகூட்டவே

பல வண்ணங்களால் நாடைகளும்

கைக்குட்டைகளும் தொங்கவிட்டு

தோள்தனில் வண்ணப் பைய்யொன்றை தூக்கி

குடுகடுப்பைக் காரன் ஒருவன்

வாசலில் வந்து நின்று

குடுகுடுப்பையை குலுக்கி

அது டுகு டுகு டுர்ர்ர் வென்று

ஒலியலை அதிர்வெழுபப்பவே

ஜெக்கம்மாவை அழைத்து

நல்லகாலம் பிறக்கப்போகுதென்றான்.

பாவம் , அவனுக்கு நல்லநேரமென்றால்

பசியாற அரிசி பணம் கிடைக்கும்

இல்லையேல் பசியால் திண்டாட்டம் தான்

அல்லது எல்லாமே ஜெக்கம்மா விட்ட வழிதான்.

 

By  Sundareswaran                                         Date: 17th  September  2014

இன்று எங்கள் தெருவுக்கு குடுகடுப்பைக்காரன் ஒருவன் வந்தான்.

ஆதிசங்கரரின் ச்லோகம் என் மனதில் தெளிந்தது.

பஜகோவிந்தம்

உதரநிமித்தம் பஹுக்ரித வேஷம்.

 

வாழ்க்கை ஓர் பயணம்

தெரியாது அதுதீருமெக்கணம்

தெரிந்தது அவன் நாமமே இக்கணம்

தெளிவாக அதனை உரைத்திடு பலகணம்

பிறந்திடும் உன் நாவில் நல்ல அறிவெண்ணம்

சொல்ல இயலாது கடைசியில் உன்மனம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s