ஓம் முருகா

ஆதிசிவன் புதல்வனே ,ஐங்கரனுக்கு அடுத்தவனே
ஆதிசக்தி நாயகியின் அருமை மகனே
ஆறுபடை நாயகனே அருள்தரும் பாலகனே
அடைக்கலம் புகுந்தோரை பன்னிருகைகளால்
அணைத்து காபப்பவனே
அருள்தரும் பிரணவதத்வத்தின் பரம்பொருளே
முருகா முருகா முருகா

முருகா என்றழைப்போர்க்கெல்லாம் முற்றும் துறந்தவனாய்
பழனிமலைதன்னில் காட்ச்சி அளிப்பவனும் நீயல்லவோ
உன்னை மறவாமல் தினம் வந்து தொழுகின்ற பலகோடி மக்களுக்கு
உதவும்கரம் நீட்டுபவனும் நீயல்லவோ
அன்னை சிவசக்த்தியவள் அளித்த வேலோடு விளையாடி
சூரனை வதைத்தவனும் நீயல்லவோ
நீ மலையேறி நின்றாலும் கடலோரம் நின்றாலும்
உலகினை காக்கின்றவனும் நீயல்லவோ
ஆறுபடை வீடமைத்து அண்ட சராசரங்களில் புகுந்து
அயராத துன்பத்தில் வாழ்பவருக்கெல்லாம்
ஆறுதலளிப்பவனும் நீயல்லவோ
உன்னை கைனீட்டி வணங்குகிறேன் என் வாழ்வில்
இருள்நீக்கி வழிகாட்ட உனக்கிந்த தாமதம் ஏன்?
உன்னை மறவாமல் தினமும்தான் வழிபடும் இத்தொண்டனுக்கும்
சிலையாக நில்லாமல் அருள்வாயப்பா.
இதிலென்ன குறை உனக்கு , பிரணவத்ததின் பொருள் தந்து
உன்தந்தை பரமனுக்கே குருவானவனும் நீயல்லவோ.

சுந்தரேச்வரன் ஆசிரியர் தினம் Date: 5th September 2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s