என் கவலைகளை தீர்ப்பாய் கண்ணா

மனிதனாகப் பிறந்த எனக்கு மனதினில் கண்ணா
என் மனம் கொள்ளா அளவுக்கேன் நீ
ஆசைகள் வளர்த்தாய்.
ஆசை மனதில் வளரவே உனை மறந்திடுவேனோ
உன்னை மறவாமல் நான் இருக்கேன்
உன் பெயர் சொல்லி
மனதில் உள்ளதை வெளியெச் சொன்னால்
மனக்கவலைகள் தீரும்
அதனை யாரிடம்தான் நான் சொல்லுவேன்
உன்னைத்தவிர
பாரதப்போர் நடுவில் அந்த பார்த்திபனின் மனக்கவலையதை
கீதை வடிவில் உரையாடி
நீ தீர்த்துவைத்தாய்.
கொந்தளிக்கும் என்மனதின் கவலைகள் தீர
கொஞ்சமேனும் உன்வாயால்
ஆறுதல் சொல்லு்.
நல்ல அறிவுரைகள் அளித்தாய் நீ கீதைவடிவிலே
அதை அனுதினம் நான் படிப்பதனால்
உன்னை நினைக்கிறேன்
என் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் நானும்
கருணைகாட்டி தீர்த்துவைப்பாய் எனக்கதை நீயும்.
என் மனதில் என்றும் தீரா கவலை வளர்ந்தால்
உன்னையல்லால் வேறு யாரை
மனதில் நினைப்பேன்.
உள்ளுருகி கேட்க்கிறேன் இந்த அடியன் சுந்தரனும்
கல்லைவிட்டு இறங்கிவந்தெனக்கு
ஆறுதல் சொல்லு , இல்லையேல்
கல்லைவிட்டு இறங்கிவந்தென்னை
அழைத்து நீ செல்வாய்.
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

சுந்தரேச்வரன் Date: 29th August 2014

Courtesy: Inspiration from our great Kaviarasu Kannadasan’s immortal lyric: KANNAN VANDAAN INGE KANNAN VANDAAN. An immortal song indeed by listening to which itself will give mental calmness.
I literally cried yesterday while listening to this song.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s