புதுப் புது ஆசைகள் நெஞ்சில் ஊறுதே
புனிதமான பாதைதனில் செல்லத் தோணுதே
பறவைபோல பறந்திட ஆசை
மீன்கள்போல நீந்திட ஆசை
மேகத்துடன் சென்றிட ஆசை
வானவில்லை போய்த்தொட ஆசை
இன்னும் என்னென்னவோ ஆசை நெஞ்சில் ஊறுதே
என்னையது எங்கெங்கோ கொண்டுசெல்லுதே.
மண்ணில் மழையாய்ப் பொழிந்திட ஆசை
நதிகள்போல ஒழுகிட ஆசை
பனிக்கட்டிபோல் உறைந்திட ஆசை
பூவைப் போல மலர்ந்திட ஆசை
குயிலைப் போல பாடிட ஆசை
இன்னும் என்னென்னவோ ஆசை நெஞ்சில் ஊறுதே
என்னையது எங்கெங்கோ கொண்டுசெல்லுதே.
மயிலைப் போல ஆடிட ஆசை
வானம் எட்ட வளர்ந்திட ஆசை
வெண்ணிலாவில் நடந்திட ஆசை
கனவுலகில் வாழ்ந்திட ஆசை
காவியங்கள் எழுதிட ஆசை
ஓவியங்கள் வரைந்திட ஆசை
இன்னும் என்னென்னவோ ஆசை நெஞ்சில் ஊறுதே
என்னையது எங்கெங்கோ கொண்டுசெல்லுதே.
நீண்ட நாட்க்கள் வாழ்ந்திட ஆசை
உறவினருடன் சேர்ந்திட ஆசை
நண்பருடன் மகிழ்ந்திட ஆசை
வாழ்ந்தகால நினைவிகளை
அவர்களுடன் பகிர்ந்திட ஆசை
இன்னும் என்னென்னவோ ஆசை நெஞ்சில் ஊறுதே
என்னையது எங்கெங்கோ கொண்டுசெல்லுதே.
இறைவனைத்தான் பார்த்திட ஆசை
இனி பிறவியில்லா வரம் கேட்டிட ஆசை
அவனுடனே சேர்ந்திட ஆசை
இவையெல்லாம் என் வாழ்வில் நிறைவேறுமா?
சுந்தரேச்வரன்
Date: 17th August 2014.