அருள்தரும் ஆண்டவனே முருகா

ஆறுபடை நாயகனே முருகா
அருள்தரும் ஆண்டவனே முருகா

பழம்கிடைக்க நீயும்தான் உலகைச் சுட்றினாய்
கிடைக்காமல் போனதால் சினமடைந்தாய்
சினம்தணிய நீயும் மலையேறினாய்
சிறுபாலகனாயங்கு குடியேறினாய்
ஆண்டியாய் ரூபம் கொண்டு அருள்கூறினாய்
சினத்தால் ஒன்றுமே அடையமுடியாதென்று
பரமனின் விளையாட்டில் இதுவும் ஒன்றென்று
பழம் நீ என்றவண்ணம் பேரெடுத்தாய்.

பிரணவத்தின் பொருள் கேட்க்க பிரம்மனுமே
தெரியாமலே அங்கு விழித்து நின்ட்றான்
சினம்கொண்டு பிரம்மனையும் சிறைவைக்க
சீட்றமடைந்தார் தந்தை பரமனுமே
பிரணவத்தின் பொருள் கேட்க்க தந்தையுமே
தெரியாமல் தவித்து நின்றார் மகன்முன்னே
தந்தைக்கே பொருளுரைத்த காரணத்தால்
தகப்பன் சுவாமியானான் சுவாமிமலையினிலே.

தாரகனை வதைத்தனால் சினம்கொண்டு
சூரனும் வந்தான் போருக்காய் திருச்செந்தூரினிலே
போரில் தோல்வியுற்ற சூரனுமே
மறைந்து நின்ட்றான் அங்கு மாமரமாய்
தாய்கொடுத்த வேலால் அதனைப் பிளக்க
மயிலும் சேவலுமாய் அது உருமாற
சூரனும் அடிபணிந்தான் உன்சினம் தீர
மயிலில் நீ அமர
அதுவும் உன் வகனமாய் மாற
சேவலை ஏற்றுக்கொண்டாய்
உனது வெற்றிக்கொடியாக.

சினம்தணியத்தேடினான் ஒரு மன்ட்றம்
வந்தடைந்தான் அவனும் திருக்குன்ட்றம்
இந்திரனும் மகிழ்ந்தான் இதையறியவே
பரமனிடம் உரைத்தான் தனது இங்கிதமே
பார்வதியும் நகைத்தாள் ஒருகணமே
தேவர்கள் முனிவர்கள் வாழ்த்திடவே
தேவயானையை மணந்தான் குலம் காக்கவே
திருப்பரம்குன்ட்றத்தில் குடியேறினான். நலம் வாழவே

முன்னமே தான் கொடுத்த வாக்குறுதி
காதலாய் மலர்ந்தது திருத்தணிகையிலே
ஐங்கரனைத் துணைக்கழைத்தான் ஆறுமுகனும்
வள்ளியை கரம்பிடித்தான் மறுகணமே
அவளை வளர்த்த நம்பிக்கும் கொடுத்தான் ஒரு வாக்கு
நம்பியோரை கைவிடுவதில்லையெனும் அருள்வாக்கு.

தன் இடப்பக்கம் கொடுத்து நின்ட்றான்
தந்தை பரமனுமே உன் தாயவள்க்கு
சக்தியும் சிவமும் சரிபாதியென்ட்றான்
தன் இருபக்கம் கொடுத்து நின்ட்றான்
தந்தைக்கு மேலான திருமகனுமே
தன்னிருநாயகிகளும்
அமுதமும் சுந்தரமும் தன் சமபங்கென்ட்றான்
பழமுதிர்ச்சோலையில் ஒருமனதாய்
மூவரும் அமர்ந்தார்கள் தங்கமயில்மீது.

அவதாரம் செய்ததின் பொருள்நோக்கம்
ஆறுபடை வீடானது உலகில் எல்லோர்க்கும்
ஆண்டியாய் கோலம் கொண்டு நின்ட்றான் முதலில் பழனியிலே
அலங்கார ரூபனாக அமர்ந்தான் முடிவில். பழமுதிர்ச்சோலையிலே

வாழ்வில் வறுமையும் செழிமையும் விதிப்படியே
ஆண்டவனுக்கானாலும் நடந்திடும் அதுபடியே
எப்போதுமுன்றென்ற தத்துவம்
ஆறுபடைவீடமைத்து ஆண்டவனே
எல்லோரும் அறிந்திட
வரலாற்றில் அன்றே குறித்தான்.

மலையேறி வருவோர்க்கு
மகிழ்ச்சியளிப்பான்
மனம்கலங்கி வருவோர்க்கு
மனமிரங்கி அருள்வான்.

கடலோரம் வருவோரை
கண்விழிகளால் பார்ப்பான்
கண்கலங்கி நிற்ப்போருக்கு
கருணை பொழிவான்.

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

சுந்நரேச்வரன் (முரளி) 25 மேய் மாதம் 2014

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s