கற்ப்பகமே கண் திறந்து பாராயம்மா

கற்ப்பகமே கண் திறந்து பாராயம்மா
உன் புன்னகையால் என் கவலைகளை தீர்ப்பாயம்மா
புல்க்கொடிகள், செடிகள், கொடிகள், காய்கள், பூக்களிங்கனைத்தும்
உன் அழகைப் பார்க்க மகிழ்ந்து மயங்கி
இளம் காற்றில் மிதந்து தன்னைமறந்தவை
நற்த்தனமாடுதம்மா.

நீ இல்லாமல்ப் போனால் இங்கு உயிரில்லாமல் போகும்
உன் அருளால்தான் அவை செழிப்பாக மலரும்
உனை நினைப்போரின் இதயத்தில் வருகின்ற பெரும்துன்பம்
நீ மனமாற வாழ்த்துகையில் அது சென்று மறையும்.

பலைவனங்களும் சோலைவனமாகும் நீ பார்க்கும் பார்வையிலே
வானம் பொழிந்திடும் பூமிசெழித்திடும் உன்னாசைக்கீடாகவே
வயல்க் காடு செழித்திட வாழ்க்கை மலர்ந்திட
உன்னை நான் பூஜை செய்கின்றேன் என்றும்……………… கற்ப்பகமே கண் திறந்து பாராயம்மா

உன்னை மறவாமலிருக்க இந்த உயிர்மூச்சு நினைக்கும்
என் வாழ்க்கைப் பயணம் ஒருநாளிங்கு நிலைக்கும்
நிறுத்தாமல் உனை நினைப்பது இதுதான் நல்ல தருணம்
இதுதானெ நான் காணும் வாழ்க்கையில் பேரின்பம்.
உன்னை நினைக்கின்ற நேரமாவதெந்தன் வாழ்வை மறக்கச் செய்வாய்.
வாழ்வு மலரவும் உன்னைநினைக்கவும் நீயே அருள்புரிவாய்
என் மூச்சுக் காத்தது நின்றதும் உந்தன், பாதம் தன்னில்வந்து, நான் அடைவேனோ?

கற்ப்பகமே கண் திறந்து பாராயம்மா
உன் புன்னகையால் என் கவலைகளை தீர்ப்பாயம்மா
புல்க்கொடிகள், செடிகள், கொடிகள், காய்கள், பூக்களிங்கனைத்தும்
உன் அழகைப் பார்க்க மகிழ்ந்து மயங்கி
இளம் காற்றில் மிதந்து தன்னைமறந்தவை
நற்த்தனமாடுதம்மா.

சுந்தரேச்வரன்
Date: 7th August 2014.

Courtesy: “POO MUDITHU POTTUVAITHA VATTANILAA”. I could not find out who wrote this fine lyric. My pranams to him or her.
When I was listening to this song, a crystal clear image of Mayilai KaRppagaambaal flashed in front of me.
In fact I was thinking of HER with a short poem” Naavil ennaaLum un peyar varassey thaaye” and while writing this song, a parallel brain inside instructed me to write in a different tune and with different words. When I asked Vinayaka, He prompted me the first line Then every word was a flow.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s