ஊர் நினைக்க வாழு

வருவதெல்லாம் வந்து இங்கு மறைந்து மறந்து போகும்
வருங்கால நினைவுகள் உன்னை சூழ்ந்து சூழ்ந்து செல்லும்
சூழ்ந்து சூழ்ந்து செல்லும்
இடைக்கால வாழ்வில் இதெல்லாமுன்னை ஒட்டி ஒட்டி நிற்க்கும்
துலைந்துபோன வாழ்வை நினைத்து அழுதிடாமை வேண்டும்
அழுதிடாமை வேண்டும்.
இதை நினைத்து வாழ்கையில், உன் இரவுத் தூக்கம் போகும்
இதை மறக்காமல் நீ வாழ்ந்தால் வியாதி உன்னைக் கவ்வும்.
வியாதி உன்னைக் கவ்வும்
வருவதெல்லாம் வந்து இங்கு மறைந்து மறந்து போகும்
வருங்கால நினைவுகள் உன்னை சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
கனவுலகில் வாழ்பவனின் வாழ்க்கை ஒரு கனவு
அதில் நிழல்ப் படங்கள் மட்டும்தான் அவனின் போதை உணற்வு
நிழல்ப் படங்கள் வந்த வந்து அவனைப் பார்த்து சிரிக்கும்
அவனும் போதை தீரும்வரை எதையோ எண்ணி சிரிப்பான்.
எதையோ எண்ணி சிரிப்பான்.
உலகவழ்க்கை இங்கெயொரு கனவுலகப் பயணம்
இதில் அடைவதென்ன துலைப்பதென்ன மாயைமறைவுத் தோற்றம்
உன் இதயமிடிப்புக் கூட இங்கே ஒருநாளது நிலைக்கும்
உலகம் என்று்ம் அதன்வழியே சுற்றிக் கொண்டே இருக்கும்
சுற்றிக் கொண்டே இருக்கும்.
வருவதெல்லாம் வந்து இங்கு மறைந்து மறந்து போகும்
வருங்கால நினைவுகள் உன்னை சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
நீயில்லாமல்ப் போனாலிங்கு உலகம் சுழலாமல்த்தான் போகுமா
உலகம் , சுழலுவதை நிற்க்கவைக்க உன்னால்த் தான் முடியுமா?
உன்னால்த் தான் முடியுமா?
வரும்கால வாழ்வை எண்ணி நீயும், கனவில் கணக்கைப்போட
அவன் போட்ட கணக்கு என்னவென்று சொல்வதற்க்கு முடியமா?
தவறாத கணக்கதென்று நீயம் அதை உணர்ந்தால்
தவறாத பாதைகளில் நீயும் அறிந்து நடப்பாய்.
நீயும் அறிந்து நடப்பாய்.
வருவதெல்லாம் வந்து இங்கு மறைந்து மறந்து போகும்
வருங்கால நினைவுகள் உன்னை சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
சூழ்ந்து சூழ்ந்து செல்லும்
ஆசைகளுக்கெல்லாம் இங்கு நீயும், அணை போட வேண்டும்
பாசங்களுடன் நீயும் கொஞ்சம் பங்கு கொள்ள வேண்டும்
நேசக் கரங்கள் மனம் திறந்து நீயும் நீட்டவேண்டும்
மழலைகளுடன் நீ வாழ்ந்து கொஞ்சிப் பேசவேண்டும்.
கொஞ்சிப் பேசவேண்டும்.
மாடு மரங்களுடன் நீயும் அன்பு காட்ட வேண்டும்
வாழும் நாட்க்களில் நீ இன்பம் காணவேண்டும்.
ஊர்மக்கள் ஒன்றுசேற்ந்து உன்னை மதிக்க வேண்டும்
நாலுபேர்கள் வந்து உன்னை தூக்கிச்செல்ல வேண்டும்
நாளும் பொழுதும் உனை எல்லோரும் நினைத்து வாழவேண்டும்.
ஊரில் ஒருவன் இருந்தான் என்று காலம் சொல்ல வேண்டும்
காலம் சொல்ல வேண்டும்.
வருவதெல்லாம் வந்து இங்கு மறைந்து மறந்து போகும்
வருங்கால நினைவுகள் உன்னை சூழ்ந்து சூழ்ந்து செல்லும்
சூழ்ந்து சூழ்ந்து செல்லும்.
ல ல்ல ல ல்ல ல ல்ல ல ல்ல ல ல்ல ல ல்ல லா லா
ஹ ஹ்ஹ ஹ ஹ்ஹ ஹ ஹ்ஹ ஹ ஹ்ஹ ஹ ஹ்ஹ…..

சுந்தரேச்வரன்
Date: 2nd August 2014
Courtesy: (Late) Mr. J P CHANDRABAABU
This is an inspiration from his immortal contribution “VETRIPETRA MANITHARELLAAM BUDHISAALIYILLAI”
How this came to my mind:
Our pet cat was crawling round and round our legs for want of milk and bread. Suddenly these cranky lines flashed in my mind and I sang it loud. Suddenly something flashed as to why not I relate this song with our mundane life and this will be a good contribution to the immortal lines of Joseph Panimayadas Rodrigues Chandrabaabu, a great comedian, Indian Chaplin, and a great singer and dancer. Even today it remains green in my memory the fantastic scene, a rat fondling his cheek and face and body in his sleep and he thinks it is his lover fondling him. A Wonderful scene indeed. He has actually played a stunt in real. It is not a morphing or animation, anybody would admit. How he could bear the touch of that rodent? That is an actor’s forte. Throughout his life he made spectators spell bound with laugher. Again he made a chicken coming out after eating a basket full of eggs. Who else could pack the dancing Danny Kaye, jovial face of Jerry Lewis and body language of Bob Hope in one’s body? That was JPC.
I dedicate these lines to him: நாளும் பொழுதும் உனை எல்லோரும் நினைத்து வாழவேண்டும்.
ஊரில் ஒருவன் இருந்தான் என்று காலம் சொல்ல வேண்டும்
காலம் சொல்ல வேண்டும்.
My cranky lines which changed my thoughts:
குட்டி போட்ட பூனைபோல காலில் சுற்ற வேண்டும்
கட்டிப் போட்ட நாயைப் போல நன்றி காட்ட வேண்டும்.
நன்றி காட்ட வேண்டும்
By சுந்தரேச்வரன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s