நடை பாதை இருக்கா இல்லையா? கிடைக்குமா கிடைக்காதா?

ஆறுமுக்குக் கல்லை எட்டுமுக்குக் கல்லை
அடுக்கிவைத்தால் இங்கு நடை பாதையாகாது
இதில் ஆயிரம் கோடிகள் புதைந்து மறைந்தது
இங்கு யாவற்க்கும் புரியாது.
இதைக்கூட ஒழுங்காக வைக்காமல்
நோண்டிப் போட்டுவைத்தால்
யாவற்க்கூம் நடக்கவே இயலாது.
பாதையோரத்தின் இருபக்கங்களிலும்
சும்மா வெள்ளைக் கோடுகள் வரைந்தால்
நடைபாதையாகாது.
பணத்தை எண்ணவே நேரம் போதவில்லையிங்கு
பள்ளங்களை யார் எண்ணுவார்?
பிஞ்சுக்குழந்தைகள் இந்த
பள்ளத்தில் விழுந்தால்க்கூட ,அந்த
பரந்தாமனே காக்கவேண்டும்.
நடைமுறை வாழ்க்கையில் நடை பாதையிருந்தும்
நடக்கவும் முடியவில்லை
அதில் நடக்கவிடாமல் தன் தேவைக்கு
பயண்படுத்துவோரை
தட்டிக்கேட்க்க யாராலும் இயலவில்லை
இதற்க்கு உடந்தையாய் நிற்ப்பவர்
யாரென்றறிந்தும்
வாய்பேச இயலவில்லை.
நடைப் பாதையில் குப்பை நிறைந்தால்
நடப்பதுதான் எதிலையோ?
அதில் அங்கிங்காய் தொங்கிநிற்க்கும்
மின்சாரப் பெட்டிகள் வயல்க் காட்டு பொம்மைபோல்
பூதமாய் தெரிகின்றன.
பக்கத்தில் நடந்தாலே மின்சாரம் தாக்குமென்ற
பயம்கூடப் பிறக்கின்றன.
நாட்டையாளுகின்ற ராஜாக்களுக் கெல்லாம்
நடை பாதை தேவையில்லை.
அவர்கள் ஆகாயத்திலிருந்து பார்க்கின்றபொழுது
நாட்டையே காண்பதில்லை.
அரைமணி நேரத்தில்ப் போய்ச்சேரும் தூரம்
அரைகுறையாய்விட்ட நடை பாதையினாலிங்கு
ஆறுமணியாகிவிடும்.
அதில்வேறிங்கு மேலும்கீழுமாய் நடந்து
மூச்சுகூட நின்றுவிடும்.
தேவையில்லாதிடத்தில் நடை பாதயெல்லாமிங்கு
தேவைக்கதிகமாயிருக்கு
தேவையுள்ளிடத்தில் அதனையிங்கு
பூதக் கண்ணாடிக்குள் தேடவேண்டியிருக்கு.
புதிதாகப் போட்ட நடை பாதையைக்கூட
அடுத்தநாள் பார்த்தால் பள்ளமாய் தென்படுது
யார்தான் செய்தார்களோ
எதற்க்குத்தான் செய்தார்களோ வென்று
ஆராய்ச்சி வேண்டியிருக்கு.
புவியியல் வல்லுனர்கள்கூடயிதன்
உள்நோக்கம் அறிந்திடவே தடுமாறிப் போய்
இந்த பள்ளத்தில் வீழ்திடுவார்.
சாக்கடைக்குமேல் நடை பாதையென்று
திட்டமேன் வகுத்தார் நமக்கு?
தண்ணியும் போகாமல் நடக்கவும் இயலாமல்
இரெண்டும் கட்டான் என்ற கணக்கு.
பாதிக்குமேலதற்க்கு மூடியில்லாமலே
ஏன் வைத்தாரதற்க்கு?
அடிக்கடி திறந்து மூடவேணாமென்றும்
அவசரவேலைக்கு குதிக்கலாமென்றும்
அறிவாளிகள்செய்த கணக்கு.
ஒருவன் செய்தவேலை
மற்றொருவன் கெடுப்பதேயிங்கு
பொழுதுபோக்காயிடுத்து.
தொழிலில்லாதவனுக்கு
தொழில்தரும் நாடாய்
பெருமையடைந்திடுத்து.
ஒருபோதும் ஒருங்கிணையா துறைகள்
என்றுசொல்லி பெருமையடைந்திடுத்து.
நடை பாதயெல்லாம் கடைவீதியானால்
நடப்பவன் என்ன செய்வான்?
நோட்டுக்கும் வோட்டுக்கும் அடித்துக் கொண்டால்
இங்கு நாடு என்னாகும் நடை பாதை என்னாகும்?
வெளிநாட்டிலுள்ள நடை பாதையைப் பற்றி
வெறித்தனமாய் வாழ்த்திடுவார்
அதை நடைமுறையில்க் கொள்ள அறிவாற்றல் பெறவே
அன்னாட்டில்ப் போய் சுற்றுலா நடத்திடுவார்,
அதைக்கண்டு மெய்சிலிற்க்க பேசுவார்.
அதை இன்னாட்டில் செய்ய தடுமாறிப்போய்
உடம்பு வியர்த்திடுவார்.
நடைபாதையெல்லாம் நரகமானாலிங்கு
நகரமே கெட்டுவிடும்.
அதையிங்கு ஒவ்வோருவரும் நன்கறிந்தால்
நகரமே ஒரு நந்தவனமாகிவிடும்.
காலம் போகின்ற போக்கை நினைத்தால்
இங்கு என்னென்ன ஆகிவிடுமோ?
கோயில்கள்க் குள்ளிருக்கும் நடைபாதைகள்கூட
மாஞ்சு மறைந்திடுமோ?
கடவுளைக் கூட நிம்மதியாய் நடக்க
நாமும் விடமாட்டோமோ?
அன்று திலகர் சொன்ன சொல்லை
ஆதாரமாய் வைத்தால்
இன்று நடை பாதைக்கும் பொருந்திடுமோ?
தேடுங்கள் கிடைக்குமென்ற யேசுநாதர் வாக்கு
நடை பாதைக்குமதான் தகுமோ?
அதுவெறும் பாழ்ச்சொல்லென்றனைவரும் தட்டிக் கழித்து
முடிவில் கிடைக்காமல்தான் போகுமோ?
சில்லறைக் காசுகள் விலைமதிப்பில்லாமல்
நாமே அதை ஒழித்ததுபோல்
இனி வரும் சமுதாயம் எப்போதுமே
காறிலும் “வானி”லும்தான் வாழ்வாரென்ற
கனவுலகத்தில் மிதக்கிறோமோ?
அவர்களுடன் நடை பாதைகளும் மிதந்திடுமோ?
அதிலவர்கள் மீண்டும் தொங்கித்தான் நடப்பார்களோ?

அதிலும் அவர்கள் பள்ளங்கள் வெட்டி
மண்ணில்த்தான் வீழ்வார்களோ?

சுந்தரேச்வரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s