அழகோ அழகு

இந்த வெண்ணிலா ஒளிதரும் முகம்
பொன்னிறம் படைத்த இக் கூந்தல்
நீரின் நீலநிறம் அந்தக் கண்கள்
இதிலேதோ ரகசியம் ஒளிந்திருக்கு.
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.

விதித்தது நடக்குமென்றுண்மையதை
மனிதர்கள் சொல்வதை நானறிவேன்.
உன்னைப் பார்த்ததும் நானதைப் புரிந்துகொண்டேன்
அவர் சொன்னது முற்றிலும் உண்மையென்று
அவர் சொன்னது முற்றிலும் உண்மையென்று
உன் வடிவத்தில் ஏன், எந்தனுயிரே,
என்னை மயங்கிடச் செய்கின்ற புதுமாயம்,
பல நூறு தடவைகள் என்னிதயமதை,
அடக்க முயன்றும் தோல்வியுற்றேன்
அடக்க முயன்றும் தோல்வியுற்றேன்
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.

காலைக் கதிரவன் செவ்வண்ணம்
உன் கன்னத்தின் எழில் தரும் தோற்றம்,
மாலையில் தென்படும் இருள்வண்ணம்
உன் கூந்தலின் நிறம் செய்த மாற்றம்.
உன் கூந்தலின் நிறம் செய்த மாற்றம்.
நீயொரு ஒழுகின்ற நதிபோல,
அதில் அசைவுகள் நெளிவுகள் உன்னுடல் தோற்றம்
இந்த அழகின் ரசனையில் குளித்தவன் எவனோ?
அவன்தான் உலகத்தில் வாழ்ந்தோன்.
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.

நான் அழகினைத் தேடி நடந்தேன்
அந்த அழகை என்பக்கம் காண
உன் முகத்திரையை கொஞ்ம் விலக்கு
எனை உன் கண்களில் காண்பாய்.
எனை உன் கண்களில் காண்பாய்.

ஏற்றுக் கொண்டேன் நான் முழுமனதாய்
உன்னழகென்னை மயக்கிறதென்று
என் மனம் நிறையத்தான் பார்க்கட்டுமா
ஈர்த்திடசெய்யும் உனதழகை.
ஈர்த்திடசெய்யும் உனதழகை

இந்த வெண்ணிலா ஒளிதரும் முகம்
பொன்னிறம் படைத்த இக் கூந்தல்
நீரின் நீலநிறம் அந்தக் கண்கள்
இதிலேதோ ரகசியம் ஒளிந்திருக்கு.
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.
இந்த வெண்ணிலா ஒளிதரும் முகம்
பொன்னிறம் படைத்த இக் கூந்தல்
நீரின் நீலநிறம் அந்தக் கண்கள்
இதிலேதோ ரகசியம் ஒளிந்திருக்கு.
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.
உன்னைப் படைத்தவர் எவரோ?
புகழுக்குத் தகுந்தவர் அவரே.

Courtesy: Film: Kashmir ki kali Lyricist: S H Bihari “Yeh chaand ka roshan chehara”
Dear Bhihariji
This is my experiment with translating the Urdu/ Hindi script to Tamil. I fully agree that Urdu is a unique language with a tantalizing charm. I have tried my best to bring an equivalent wording and melody and rhythm without spoiling the theme. So many lines that cannot find duplication! That’s Urdu, that’s your catch!
My small suggestion. The line ‘ho jaen door andherey’. Can it not be changed to ‘ Tum dekh sakoom mujhe dil mein’. I think his destination is, having found her, he has reached the destination. He is requesting her to remove her face mask or the duppattaa she was wearing so that she can have a full view of him and accept his love for her. If I am wrong, please correct me. Or is it, if she removes her mask, her confusion in her mind about him will vanish?
In Tamil, our lyricist Kaviarasu Sri.KaNNadasan Sir had written beautiful lines regarding the mask or screen that separates the lovers.
The female sings after seeing and finding the behavior of the male:
En vaazhkkai nadiyil Karai ondru kande’n,
Un nenjil e’tho’ KARAI ondru kande’n
Puriyaathathaale’ thirai pottu vaithe’n,
Thirai pottapothum ANAI podavillai.
MaRaithidum thiraithannai vilakkivaippaayo’, VILAKKIVAIPPAAYO’.

In my flowing river like life, I could find in you the banks (Karai) for support
But, I think, I have seen some unusual feelings on me (about me) have erupted (KARAI) or tainted feeling creped in your mind.
Not being able to fully understand about you, I have covered myself with a transparent screen, or standing behind a transparent screen, but I have not put an opeque barricade.
Remove or unveil ( vilakkivaippaayo) the gossamer before me, that’s the screen
Make me understand (VILAKKIVAIPPAAYO) about you. Otherwise remove the confusion in my mind about you.
Thank you Sir.

Dated 8th May 2014 By Sundareswaran alias Murali

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s