வீண் ஜம்பம்

 அத்திக்கில் வாழ்ந்தோரெல்லாம்

பலபல இடங்கள் கண்டறிந்தார்

இத்திக்கில் வாழ்ந்தோரும்தான்

வல்லுனராகத் திகழ்ந்திருக்கார்.

 

அத்திக்கைப் பற்றி நீ

அளவுக்குமீறிப் பேசாதே

இத்திக்கில் உள்ளோரும்

அத்திக்கில்ப்  போய் படித்திருக்கார்.

 

ரொம்பவுமே ‘ஷோ’ வேண்டாம்

சாதாரணமாய் இருந்துவிடு

இல்லையெனில் ஊர் ஜனங்கள்

உன்னைப்பார்த்து சிரித்திடுவார்.

 

சொன்னதெல்லாம் விளங்கிடிச்சோ

இன்னமும் சொல்லத் தேவையுண்டோ

வெண்டைக்காய் வெடித்ததுபோல்

வாயைத்திறந்து   நிற்க்கிறெயே.

 

சுண்டைக்காய் என்பதுபோல்

யரையும் இங்கே நினைக்காதே

முழுப்பூசணிக்காய் விழுங்கும்போல்

மற்றவர் உன்னைத் தின்னிடுவார்.

 

உன்   குடும்பத்தின் பெருமைகளை

அளவுக்குமீறி  நீ ‘அளக்காதே’

வெளியுலகம் அதுதெரியவந்தால்

அழுகியபழம்போலாகிடுவாய்.

 

வானத்தில் பறப்பதெல்லாம்

இங்கு, இன்று, வெகு  சுலபம்

வீணாக அதைப்பற்றியே

மற்றவரிடத்தில் ‘ஜொள்ளாதே’

 

பறவைகள் கூட வானத்தில்

பலபல இடங்கள் செல்வதுண்டு

மலர்கள் கூட தன்னழகை

உலகத்துக்காய் அளிப்பதுண்டு

பழங்கள் கூட அதன் ருசியை

அதுவே தின்று பார்ப்பதில்லை

அவைகள் கூட இதைப்பற்றி

தன் இனத்தாரிடத்தில் ‘அறுப்பதில்லை’.

 

வாழ்நாளில் அவைகளுமிங்கே

‘வீண் ஜம்பம்’      நடிப்பதில்லை

ஆறறிவு     இருந்தும் இங்கே

அவைகளின் அறிவும் உனக்கில்லை.

 

முழு உண்மையுடன் வாழ்பவனுக்கு

கோயில் குளங்கள் தேவையில்லை

கடவுள்கூட அவனிடத்தில்

நண்பனாய்வந்து பழகிடுவான்.

 

பவக்காய்   கூட   இங்கு

ருசியாயிருக்கும் பொழுதினிலே

சாதிக்காய் அடித்துக்கொண்டு

கசப்பாய் வாழ்க்கை நடத்திறயே.

இதையெல்லாம் அறிந்திருந்தும்

முட்டாள் போல வாழுறியே

வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு

வாழநாளைத்தான் அழிக்கிறியே.

 

வானத்தின் அகலமதை

சோதனைமுறையில் அளந்திடலாம்

முருங்கைக்காய்,     புடலங்காய்

நீளம் கூட அளந்திடலாம்.

 

மூவுலகை அளந்துநின்ற

பரமனும்தான் ஒருவேளை

உன் ‘வீண் ஜம்ப’மதை அளக்கமுயன்றால்

தடுமாறித்தான் தலைகுனிவான்

மனதுடைந்து   கவலைப்பட்டு

அந்தரத்தில் அவன் தொங்கிடுவான்.

அஹஹா  ஹா  ஹா ல ல்ல ல்லா லா லா ஹு ஹு  ஹூஹூ  ஹூம்………

 

Courtesy:  Inspiration from   Kaviarasu  Kannadasan         Athikkaai kaai kaai.     Bale Paandyaa  The scintillating music by Viswanathan and Ram moorthy and the words in the lyric by Kaviarasu has fused together to make it immortal. It looks as Siamese twins, without one,other cannot exist. If Kaviarasu had used some more “kaais”to mix with the romantic moods, it would have been still enjoyable.

Pinkurippu:

How this inspiration got focused in my brain?

When I was helping my wife cutting the “KOVAKKAAI” for our daily gruel, I overheard somebody outside the gate “ALAKKALING” about his foreign trip and their family “PEETHIFICATION” and their life abroad.

(I have used literal Tamil slangs here in commas).

 I have made use of JOLLU and ARUPPATHU in the song.

It looks nice to write in English Tamglish.

கவியரசின் வாற்த்தை வரிகள்

சிந்தனைக்கு வித்துக்கள்,

அறிவுக்கு தூண்டுகோல்.

 

ஆனால் என்னுடைய வாற்த்தைவரிகள்

உங்களை சிரிக்கச்சொல்ல எனது

தாழ்மையான வேண்டுகோள்.

கொஞ்சம் சிரிப்போமே, கவலைகளை மறப்போமே.

சுந்தரேச்வரன்                                  Date: 11th  June  2014

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s