ஜோஸியம் ஜாதகம்

 

 பொருள்தேடி அலைகின்ட்றோம் நாமும்

வாழ்வில் நிம்மதியை இழக்கின்றோமென்னாளும்

அவன்அருள்தேடி அலைந்திருந்தோமெனில்

வாழ்வில் நிம்மதியாவது சேற்ந்திருக்கும்.

உறவுகள் நண்பர்களென்று பலர்

இங்கு வருவார்கள் போவார்களென்றும்

இரவுகள் பகலுகள் போல

வாழ்வு முடிந்திடும் நாள்காணும் வரைக்கும்.

பிறக்கின்ட்றபோதிங்கு வரைவார்கள்

வாழ்க்கையின் பன்னிரெண்டு கட்டம்

வாழ்வின் உயர்வுகள் தாழ்வுகளெல்லாம்

அதில் அடங்குமென்பதைக் கூறும் திட்டம்

எண்ணிக்கை பலதும் நடத்தி

போடுவார் அதற்க்கொரு கணிப்பின் வட்டம்.

அதில் ஏற்றங்கள் காண்கையில் சிலிற்ப்பு

இறங்கிவிட்டாலோ நெஞசில் கொதிப்பு.

ஏற்ற இறக்கங்களை சமமாய்ப்பார்த்தால்

வாழ்வு எப்பொழுதுமே நலதாகி மாறும்.

வாழ்க்கையொரு பரமபதமென்று

பரமனே குறித்திட்ட மாபெரும் தீற்ப்பு

அதில் ஏணிகள் பாம்புகள் எப்படிவரைந்தாலும்

விளையாடவேண்டியது ஒருவனின் பொறுப்பு.

பிறவிகள் பலதும் எடுப்போமென

பிறரிடம் சொல்லுவார் பலருமிங்கே.

வைகுண்டத்தைப் பற்றிச் சொல்லுவாரிங்கே

வைகுண்டம் தான்போய்ப் பார்த்ததைப்போல.

வேதங்களிங்கே நால்வகையுண்டு

வேள்விகளும் கேள்விகளும்

நிறையவே அதினுள்ளிலுண்டு.

சாஸ்த்திர சம்பிரதாயங்களெல்லாம்

ஸாத்வீக  வாழ்க்கைக்கு

நல்லதாய்ப் பொருந்தும்.

அவசர வாழ்வில் இதெல்லாம்

அள்ளித்தளித்திட்ட கோலம் போலாகும்.

பிறந்த நேரமதைவைத்து

குறிப்பிடும் கட்டங்கள்

ஒருவனின் இக்காலவாழ்க்கையில்

முக்காலங்களைப்பத்திக் கூற

இறந்த நேரமதைவைத்து

கட்டங்கள் போட்டால்

அவனின் மறுஜென்ம வாழ்க்கை

என்னவென்று கூறுமோ?

வாழ்வில் எதிர்காலத்தைப் பற்றி யோசனைகூற

கிளி ஜோஸியம்கூடப் பார்க்கிறார் இங்கே

நல்லதுகெட்டது பின்னிப்பிணைத்திட்டு

சொல்லத்தெரியாமலே ஏதேதோ உளறி

பசிபோக்கிடவே வழி தேடுறானிங்கே

கடவுளின் படமதை வைக்கிறானங்கே

கிளிவந்து கொத்திடத்தகுதியாக

வேறெந்தப்படங்களைவைத்தாலும்கூட

கிளிவந்ததனை எடுக்காமலா போகும்?

வேளாவேளைக்கு பழம் கிடைத்தாலது

விளையாட்டாகவே தன் வேலையைச்செய்யும்

வாழவிடாமல் அதை கூட்டில் அடைத்தவன் காதில்

வேதாந்த வேள்விகளைத்தானா அதுகூறும்? இல்லை

தன் விதியை நினைத்து அழுதிடவா செய்யும்? இல்லை

விதியைமாற்றிட அவனிடமே

தன் கைகளை (கால்களை)க்காட்டி

இதற்க்கென்ன பரிகாரம் என்பதையா நாடும்?

மதுரையில் குடிகொள்ளும் மீனாக்ஷியின் தோளில்

மமதையுடன் வாழம் உனக்கிந்த

மரக்கூட்டில் வாழும் விதியை நினைத்தேன்

மனம்வாடி நானுமந்தச் சதியைப் பதைத்தேன்.

முன்ஜென்மம் நீ செய்த பாபம்தான் என்ன?

இஜ்ஜென்மம் நீயும் இன்னிலையில் வாழ?

வரலாறுகள் மீண்டும் தொடர்கின்ட்ற போல்

முன்ஜென்மம் நீயுமோர் கிளிஜோஸியனோ?

அந்த ஜோஸியனும் அஜ்ஜென்மமோர் கிளியாயிருந்தானோ?

அவனின் ரெக்கைகளை நீயுரித்த பாபம் தீர

அவனும் இஜ்ஜென்மமுனது ரெக்கையுரித்தானோ?

செயலுக்குச் செயலென்ட்ற அக்கால தீர்ப்புகள்

இக்காலமும் அது விதிவழியாய்வந்து தொடர்கின்ட்றதோ?

திறந்துவிட்டாலது வெளியேதான் வாழும்

தன்னை சிலகாலம் உயிர்வாழவைத்த

நன்ட்றியைத் தெரிவிக்க அந்த ஜோஸியனுக்கும்

வானில்ப்பறந்துபாடி தன்னை மறந்தது

வாழ்வு    மலர்ந்திடவே, வாழ்த்துக்கள் கூறும்.

 

By Sundareswaran alias   Murali              Dated 31st May 2014 between 4 P.M. and 6 P.M.

When I was walking on the road, I saw one Parrot soothsayer. Two days back I saw in the papers that bird lovers and Naturalists are trying to release the caged birds. But again it has surfaced right under their nose.

Tail end poem:

Inspiration from the all time great poem “THE DAFFODILS” by William Wordsworth

When I saw one soothsayer (KiLijosian)   on the way,

My inner soul started ticking in a peculiar way.

When it started to dance in sprightly sway

It gave me something to write in the month of May.     (My cranky writings)

The first four lines of the Tamil song are the reflections from the life of Cardinal Wolsey as quoted below:

The word of Cardinal Wolsey uttered from his death bed to King Henry VIII echoes and reechoes and reverberates in my ears. It seemed to be a message I should have followed during my life. To quote:’ But if I had served God as diligently as I have done the king, He would not have given me over in my grey hairs.’

செயலுக்குச் செயலென்ட்ற அக்கால தீர்ப்புகள்

Hammurabi Law

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s