ஸுதாமாவின் அவில்முடிச்சுகள்

ஓம்

சர்வம் கிருஷ்ணாற்ப்பணம்

முதல் முடிச்சு::  கண்ணன், ஸுதாமாவின்    குழந்தைக்  காலம்

மாடுமேய்க்கும்    கண்ணனுக்கு பக்கபலமாகவும் தோழனாகவும் ஸுதாமா எப்பவும்   இருக்கவேண்டுமென்பது தாய்யசோதயின் கட்டளை. குழந்தைப் பருவத்தில் வெண்ணய் திருடித்தின்னும் கண்ணனுக்கு பசிவரும்போதெல்லாம் தின்பதற்க்கு அவிலை ஸுதாமாவின் தோள் துண்டில் ஒருபக்கம் கட்டி மறுபக்கம் அதுபோல் ஸுதாமாவிற்க்கும் கட்டிக்கொடுத்து யசோதை அனுப்புவாள்.ஸுதாமாவோ பசிதாங்க முடியாதவன். இது கண்ணனுக்கும் யசோதைக்கும் நன்கு   அறிந்ததே.அதற்க்காக ஸுதாமாவின் முடிச்சில் தாராளமாகவே அவிலை நிறைப்பாள்.அவளுக்கென்ன சௌபாக்கியத்தில் நிறைந்தவள். கண்ணனின் தாய். அதே ஒரு பெருமையல்லவா.  கோகுலத்தில் என்ன குறை. .  எல்லாமே நிரம்பிவழிகிறது.. பிறர் குழந்தையய் ஊட்டிவளற்த்தால் தன்குழந்தை தானாகவளரும் என்ட்ற கருத்தை இது தெரிவிக்கிறதோ. ஸுதாமாவிடம் யசோதை எச்சரிக்கை செய்துள்ளாள், ஒருபோதும் கண்ணனுக்காக கட்டிவைத்த முடிச்சை அவுக்காதே என்ட்று. ஸுதாமாவும் தலையாட்டிக்கொண்டே போவான். பாதிநாளும்  ஸுதாமா கண்ணனை மறந்துவிடுவான்.கண்ணனோ தனது புல்லாங்குழலில் அமுதகானம் வாசித்துக்  கொண்டே மாடுகளுக்கும் கன்ட்றுகளுக்கும் பசியைய் தீற்த்திடுவான்,  தன்பசி அறியாமலே. .மலையில் வீடுதிரும்பும்போது ஸுதாமாவிடம் கண்ணன் சிரித்துக்கொண்டே கேட்பான் உனக்கு பசிதாகம் ஆறிவிட்டதா என்ட்று.   ஸுதாமாவும் கண்ணநிடம் உண்மையய் சொல்லிவிடுவான்,  தான் எல்லாவற்றயும் தின்ட்றுவிட்டேனெட்று.அம்மாவிற்க்கு இந்தவிஷயம் தெரியக்கூடாதென்பதற்க்காக ஸுதாமா கண்ணநிடம் மன்னிப்புக்கேட்டு காலில் விழுந்து கெஞ்சுவான், கண்ணனும் மன்னித்துவிடுவான். ஆனால் அம்மாவிடம் எப்படி சமாளிக்கப்போகிறாய்.அதற்க்கு கண்ணன் சாப்பிட்டானா என்ட்று அம்மா கேட்க்கின்ட்றபோதெல்லாம் ஸுதாமா தன்திறமையால் ஏதோ சாக்குப்போக்கு சொல்லி சமாளித்து விடுவான்.

இரவில் ஸுதாமா தூங்கும் பொழுது பக்கத்தில் இருந்து கண்ணனும் மனதில் எண்ணிக்கொள்வான்,  தன்பங்கயும் மீறி மற்றவன் பங்கிலும் கை வைய்த்துவிட்டானே என் தோழன், அவன் பசி தீரும் நாள் எப்போழுது வரும்என்ட்று சங்கடத்துடன் நினைத்திருப்பான்.

மட்றவன் முடிச்சில் கைவைய்த்துவிட்டாயெடா,  என்தோழா, உன்பசிமாற காத்திரு.

தொடரும்……..

இரண்டாவது   முடிச்சு:

கண்ணனும் ஸுதாமாவும் பால்ய பருவத்தில் குருகுலவாசத்தின் பொழுது

சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் கண்ணனை குருகுலவாசத்திற்க்கு  தந்தை நன்தகோபர் அழைத்தச்செல்ல தயார் படுத்துகிறார்.  கண்ணனும் அம்மாவிடம் ஸுதாமாவைக்கூட  படிப்பதற்க்கு தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கூறுகிறான்.  தாய் யசோதயும் கணவனிடம் இதைச்சொல்லி சம்மதத்தை பெட்றுக்கொள்கிறாள். ஸுதாமாவிற்க்கு ஒரே சந்தோஷம். கண்ணனுடன் செல்கிறோம்.அதனால் பசி தீர்ந்துவிடும்.

மறுபடியும் யசோதை ஸுதாமாவை தன்னிடம் அழைத்து அவனது தோள்துண்டில் ஒருபுறம் கண்ணனுக்கும் மறுபுறம் ஸுதாமாவுக்கும் தனித்னியே அவில் நிறைத்து முடிச்சுக்கள் போடுகிறாள்.கண்ணனுக்கு பசிக்கும் வேளையில் அவன் பங்கை தவறாமல் கொடுத்துவிடு என்ட்று மெதுவாக மறுபடியும் எச்சரிக்கிறாள்.ஸுதாமாவும் தலையய் ஆட்டுகிறான்.

ஆசிரமத்தில் மற்று பல பிள்ளைகளும் இருந்தனர்.எல்லோரும் அவரவர் துண்டுகளில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மத்திய உணவுகள் இருந்தன. முனிவரின் பார்வை தன்மேல் படாத நேரம் பார்த்து ஸுதாமா மெதுவாக மற்றவர்களின் துண்டுகளிலிருந்து முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து தன் பசியை அடிக்கடி தீர்த்துக்கொண்டான். கண்ணனுக்கு குருவிலிருந்து அறிவை வளற்க்கப்பசி. ஸுதாமாவிற்க்கு பசியை அகற்றும் அறிவு. இதை கண்ணன் பார்த்துவிட்டான். பன்னகைத்தான். மதியம் இடைவேளயில் உணவருந்த எல்லோரும்  போனநேரம், கண்ணனும் தன்  குழலில் அமுதகானத்தை வாசித்தபடியே தன் பசியை மறந்தான்.ஸுதாமாவும் அந்த கானத்தில்மயங்கி கண்ணனின் பங்கையும் தீர்த்துவிட்டான்.மறுபடியும் ஆசிரமத்துக்கு திரும்பும் நேரம் கண்ணன் சாதாகரணமாக தன் தாய் கொடுத்த அவிலை கேட்டான். ஸுதாமாவும் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணனிடம் காலில் விழுந்து மன்ட்றாடினான். பசிக்கு விருந்தாகும் கண்ணனுக்கா பசிக்கும்?

இரவில் நிம்மதியாகத்தூங்கும் ஸுதாமாவை நினைத்து கண்ணன் வருத்தப் பட்டான். முதலில் என் முடிச்சில் கை வைத்தான்.நான்  பொறுத்துக்கொண்டேன். யசோதயிடம் பொய்சொல்லி சமாளித்துவிட்டான்.  அவளும் ஏனோ போகட்டும் என்ட்று நினைத்திருப்பாள்.தாயுள்ளம் எப்பொழுதும் அன்புநிறைந்தது.அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் அவனுக்கு பசி மாறாமல் போய்விட்டது. இப்பொழுது மற்ற குழந்தைகளின் முடிச்சிலல்லவா கைவைத்துவிட்டான் என் உற்ற தோழன். அவனுக்கு தன் குடும்ப வாழ்க்கையில் ஏற்ப்படும் மனைவி குழந்தைகளின் பசியை மாற்ற இயலாமல் போய்விடுமே?  என்னைத்தவிர எதுவுமே அறியாதவன் என் தோழன்.

தோழா மற்றகுழந்தைகளின் முடிச்சில் கைவத்த உனக்கு   உன் குடும்பப்சியாற காத்திரு.                                                                     தொடரும்……..

மூன்ட்றாவது முடிச்சு:

கண்ணனிடத்திலிருந்து வேற்பட்டு ஸுதாமா   குடும்பவாழ்க்கயில்மனைவிமக்களுடன்

பாத்திரத்தில் அன்னத்தின் அளவு குறையக்குறைய தன்வீட்டில் குழந்தய்ச்செல்வங்கள் அளவு வளற்ந்து பொஙகின. என்ன வேடிக்கை இது. வாழ்க்கையின் தத்துவம் புரிவதற்க்கும் பரந்தாமனை நன்கு அறிவதற்க்கும் இது ஓர் தருணமோ?   காலம் கடந்தது.  தன்பசியை அடக்க ஸுதாமா வெளியில் எங்கோ சென்ட்றுவிடுவார். மனைவிமக்களை யார் கவனிப்பு?  பசி அடக்க அவரை வெளியே அனுப்பினால் ஊரே சிரிக்கும் என்ட்ற ஐய்யம்வேறு.

ஒருநாள் ஸுதாமாவிடம் அவர் மனைவி வெகுசாதாரணமாகவே கேட்டாள். உங்கள் ஆத்ம நண்பன் என்ட்றுசொல்லும் கண்ணனிடம் நீங்கள் ஏன் இப்போது போவதில்லை.அவர் மதுராநகரின் மன்னன். அதற்க்கு ஸுதாமா சொன்னார். நான் அவனை என் திருமணத்துக்கு கூட அழைக்கவில்லையே.எனக்கு குழந்தைகள் பறந்ததைக்கூட தெரிவிக்கவில்லை. நான் எங்கே என்னநிலையில்இருக்கிறேன் என்ட்றும் அவனுக்குத்தெரியாது. இப்பொழுது இந்த தள்ளாடும் குடும்பச்சூழ்னிலையில் அவனை நான் எப்படி சந்திப்பது.என் நிலையய் எப்படி என் நண்பனிடம் கூறுவது?   அவனுக்கு என்னைப்பார்க்க நேரமிருக்குமோ?

மனைவி மீண்டும் அச்சுறுத்தினாள்.ஒருமுறை கண்ணனைபார்த்துவாருங்கள். நாம் படும் கஷ்டத்தை கூறினால் ஒருவேளை மனம் இரங்கி நம்மை வாழவைப்பான்.அவனிடம் போகலாம்.ஆனால் நண்பனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே?

மனைவி ஒருகணம் யோசித்தாள். என்னகொடுப்பது? தன் கணவன் தன்னிடம் பலமுறை அவர் கண்ணனுடன் வாழ்ந்த அந்த குழந்தைக்காலத்தைக் குறித்து சுவாரச்யமாக சொல்லுவார்.அவருடய தாய் யசோதய் கொடுத்த அவில், கண்ணனுக்குக் கொடுக்காமல் தான் உண்ட அவில், மட்ற குழந்தைகளை ஏமாற்றி உண்ட அவில்.

அவளுக்கு தெரிந்தது கண்ணனுக்கு பிடித்தது அவில்.

வேகமாகச் சென்ட்றாள்.பரணயில் தொங்கவிட்ட பாத்திரத்தில் மிஞ்சியிருந்த அவிலை எடுத்தாள்.தன் கணவனின் தோள்த்துண்டை விரித்தாள். அவிலை நிறைத்தாள். கட்டியாகவே முடிச்சப் போட்டாள். தன் கணவனின் தீராப் பசியை நன்கறிந்தவள்.முடிச்சிடும்போது எச்சரிக்கையுடன் சொன்னாள்.இது கண்ணனுக்கு நான் கொடுக்கும் பரிசு.இதனைமட்டும் வழியில் திறந்து தின்ட்றுதீர்த்துவிடாதீர்கள். இது நான் குழந்தைகளுக்காக வைத்தது.அவர்கள் இரவுசாயும்பொழுது விளையாடி வீடுதிரும்புவார்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்கிறேன்.நீங்கள் சிரமப்படாமல்ப் போய் கண்ணனைப்பார்த்து இதைக் கொடுத்துவாருங்கள்.

ஸுதாமாவும் கண்ணன் அரண்மனையய் நோக்கி நடந்தார். அடிக்கடி தன்னை பசி வாட்டியது.முடிச்சை தொட்டுப் பார்த்தார்.  மனைவியின் எச்சரிக்கை காதில் ரீங்காரமிட்டது. .மீண்டும் நடந்தார்.  தாய் யசோதை போட்ட இரண்டுமுடிச்சுக்களையும் வெகு எளிதில் திறந்த ஸுதாமாவிற்க்கு மனைவிகட்டின மூன்ட்றாமது அவில் முடிச்சய் திறக்க முடியவில்லைய்.

யசோதையின் வாழ்க்கயில் துன்பங்களே இல்லை.அதனால் பிணைப்பகள் இல்லை. ஆனால் இங்கு தன் மனைவி தன் வாழ்க்கையில் அவள்பட்ட அத்தனை கஷ்டங்களையும் தன் கண்ணீரையும் சேற்த்து முடிச்சுப் போட்டதின் பிணைப்புகள் இந்த முடிச்சு.இதனை திறக்கமுயன்ட்றால் பொழுது சாய்ந்துவிடும். அப்பறம் திரும்பிப் போக இயலாது.இருட்டில் வழிதவறிவிடும். மூன்ட்றாவதுமுடிச்சுக்கு இருக்கும் சக்தியால் ஸுதாமா கட்டுப் பட்டார். தாலிகட்டும்ப்பொழுது மூன்ட்றுமுடிச்சுப் போடுவதும் இக்காரணம்கொண்டோ? கட்டுப்பாட்டை மீறக்குடாதென்பதற்க்காக.

ஸுதாமா கண்ணன் அரண்மனை வாசல்வந்தான்.ஏற இறங்கப் பார்த்தான்.தன் தோழனின் இருப்பிடமா இதென்ட்று வியந்தான்.  உள்ளே போவதற்க்கு சிரமப் பட்டான்.  காவலர் தடுத்தனர்.  தான் கொண்டுவந்த மனைவி கொடுத்துவிட்ட பரிசை தொட்டுப் பார்த்தான்.  பரிசை கண்ணனிடம் கொடுத்து வாருங்கள் என்ட்ற வாற்த்தைகள் மறுபடியும் தன் காதைத்துளைத்தது.ஒருமுறைமனமாற கண்ணா என்ட்று குரலெழுப்பினான்.கண்ணனே அரண்மனை வாசல் வந்துவிட்டான்.கூப்பிட்ட குரலுக்கு வருவேன் என்ட்று சொன்னவனல்லவா அவன்.

தன் ஆத்ம நண்பனைத் தழுவினான்.உள்ளே அழைத்துச் சென்ட்றான்.அற்க்ய பாத்யங்கள்       நடந்தன.மணிபீடத்தில் ஸுதாமாவை இருக்கச் செய்தான்.ஸுதாமா சென்ட்ற நேரமோ கண்ணனின் மதிய உணவின் காலம்.இரண்டுபேரும் உணவருந்தினர்.பசியில் மறந்த ஸுதாமாவின் பசியாற பாமா ருக்மணி இருவருமே உணவுபரிமாறினர்.

கடந்தகால வாழ்க்கையய்ப்பற்றிப் பேசி இருவரும் மகிழ்ந்தனர்.நேரம் கடந்தது.  ஸுதாமா திரும்பும் தருணம் வந்தது.   கண்ணனைப் பார்த்த கண்களுக்கு உலகமே மறந்தது.  தன் குடும்பத்தய் மறந்தான் ஸுதாமா.புறப்படும் தருணம் ஸுதாமாவின் தோள்துண்டில் இருந்த முடிச்சைப் பார்த்தான் கண்ணன்.  வழியில் பசியாட்றுவதற்க்காகவா இந்த முடிச்சு என்ட்று கேட்டான்.  அப்பொழுதுதான் ஸுதாமா தன் மனைவி கொடுத்துவிட்ட பரிசை நினைத்தான். பரிசை வாங்கிய கண்ணனும் இதில் இத்தனை பிணைப்பக்கள் ஏனென்ட்று கேட்க,   இது என் மனைவி உனக்காக கொடுக்கச்சொன்ன பரிசு.இதை நான் வழியில் தின்ட்றுவிடாமலிருக்க அவள் போட்ட பிணைப்புகள்.இதை நான் வழியில் திங்கநேர்ன்ட்றால் பொழுது சாய்ந்துவிடும்.பிறகு உன் அரண்மனைக்கு வர நேரம் இருக்காது.

கண்ணன் அந்த துண்டை வாங்கினான், சட்டென்ட்று முடிச்சை அவிழ்த்தான்.திறந்தான். புன்னகைபுரிந்து கண்ணன் ஸுதாமாவிடம் கூறினான்.அதே அவில்.எனக்கு மிகவும் பிடித்தது. .உன் மனைவி அறிவாளி.யாருக்கு என்ன வேண்டும், என்ன விருப்பம், என்பதறிந்தவள்.

இங்கே கண்ணன் மனசாரச் சிரித்தான்.நினைத்தான்.முதலிரண்டுதடவை என் தாய் யசோதா பின்னிய முடிச்சை,  நீ வாழ்க்கயில் ஒருவிதமான கட்டுக்கோப்பயும் அறியாமலும் தெரியாமலும்,  திறந்து என்னையும் என் பசியையும் மறந்து உண்ட்றதால் துயரத்தின் முடிச்சில் சிக்கி மழுகிவிட்டாய்.இந்த சிக்கலான மூன்ட்றாவதுமுடிச்சை நான் வெகு எளிதாகத் திறந்துவிட்டேன்.  உன் கஷ்டங்களிலிருந்து நீ இப்பொழுது வெளிவந்துவிட்டாய்.

முதல் இரண்டுதடவை நீ திறந்தாய்.ஒன்ட்றை நினைத்து ஒன்ட்றய்ச் செய்தாய்.  பசியைய் நினைத்து முடிச்சய் திறந்தாய்.  கஷ்டங்கள் தொடற்ந்தது.இங்கு நான் உன் மனைவியின் அன்பை நினைத்து முடிச்சைத் திறந்தேன். காரணம் வாழ்க்கையில் ஓர் கட்டுக்கோப்புடன் மனைவியின் வாற்த்தையய் கேட்டு என்னிடம் வந்து சரணடைந்துவிட்டாய்.அன்புடன் வழங்குவதை நான் ஒருபோதும் மறுப்பதில்லை.

எடுத்தான் ஒரு பிடி.கைய்யைய் மேலுயற்த்தினான்.மேல்நோக்கி தன் வாயைத் தறந்தான்.அவிலை வாயிலிட்டான். சுவைத்தான்.  மிகவும் ருசியானது அவில். வாயலிட்டுசுவைத்தால் அதன் ருசியே தனி.

மறுபடியும் எடுத்தான் இன்னொருபிடி.  பாமா கண்ணனின் கைமணிக்கட்டில் பிடித்தாள்.  போதும் என்ட்றாள்.  கண்ணனும் புரிந்துகொண்டான்.  தன் மனைவிக்கு கட்டுப் பட்டான்.

தொடரும்…….

 

நான்காவது முடிச்சு:

கண்ணனிடமிருந்து ஸுதாமா விடைபெருகிறான்

மிச்சமுள்ளதை கண்ணனே மீண்டும் துண்டில் முடிச்சுவைத்து ஸுதாமாவிடம் கொடுத்து இதனை மனைவியிடம் கொடுத்து இரவில் குழந்தைகளின் பசியாறச்செய்யுங்கள்.ஸுதாமா வியந்தார். தன்மனைவி சொன்னதை கண்ணன் திரும்பச்சொன்னதைக்கேட்டு வியந்தார்.ஒருவேளை நான் இதனை வழியில் முடித்துவிடுவேனோ என்ட்ற சந்தேகம்போலும்.

 பாமா ஏன் கைய்யைப்பிடித்தாள்? அன்ட்று வாமனனாக அவதரித்து தன் காலால் இரண்டே அடியில் அண்ட சராசரங்களை அளந்த அந்த பரமாத்மா,மூன்ட்றாவது அடியை எங்கே வைப்பது என்ட்று பலிச்சக்கிரவர்த்தியிடம் கேட்டபோது,அந்த மூன்ட்றாவது அடியை அடியன் தலைமீது வைய்யுங்கள் என்ட்று கேட்ட பலிமன்னன் அந்த பாதத்தைப்பிடித்தான்.அது பலிமன்னனுக்கு மோக்ஷத்தை அளித்தது.ஆனால் இங்கோ அந்த முதலில் அள்ளிய பிடி அவில் முழுமையாக  கண்னின் வாயில் அடங்கியதுமே,ஸுதாமாவின்  கஷ்டங்கள் முழுமையாக கரைந்துவிட்டது.கண்ணன் சுவைத்துமுடித்தது அவில் அல்ல, அந்த ஏழை புண்ணியவதியின் கஷ்டங்களை.கண்ணன் கை உயர்ந்தால் அங்கு சௌபாக்கியம், கால் உயர்ந்ததால் அங்கு மோக்ஷம்.   ஏன் மேல்நோக்கி உண்டார்?   அன்பாகக்கொடுத்தது தறையில் சிந்தாமலிருக்க.இதன் உள்ளர்த்தம் கண்ணன் கொடுத்த சௌபாக்கியம் ஸுதாமாகுடும்பம் முழுமையாக அடைவதற்க்காக.  எங்கும் சிந்தாமல் சிதறாமல்.

ஸுதாமா கண்ணனிடம் விடை பெற்றுக்கொண்டான்.திரும்பிவரும்போது யோசித்தான். மனைவி தன்னிடம் சொன்ன வார்த்தைகளை.கண்ணனிடம் உதவி கேளுங்கள்.அதை கேட்க்கமறந்த ஸுதாமா மிகவும் வருத்தத் துடன் தன் வீடுதிரும்பினான்.தானிருந்த வீட்டின் மாற்றங்களை,தெருவின் மாற்றங்களைக் கண்டு தனக்கு வந்த இடம் தப்பியதோ என்ட்று பேதலிக்க,தன் மனைவி ஆடை அணிகலனுடன் வாசலில் நிற்ப்பதைக் கண்டான்.உள்ளே சென்ட்றார் வியந்தார்.குழந்தைகள் ஆடை ஆபரணங்களுடன் ஓடிவிளையாடுகிறார்கள். அவர்களுடய பசிதாகம் முற்றிலும் தீர்ந்தனக் கண்டார்.மனைவி கணவனிடம் சந்தேகத்துடன் கேட்டாள்.நீங்கள் கண்ணனிடம் என்ன கேட்டீர்? நான்கொடுத்த அவிலை ஏற்றுக் கொண்டாரா?

ஒருகைய்யில் துண்டில்க்கட்டிய அவிலை விடாமல் ‘கண்ணா‘ என்ட்று உறக்கே கூவினார்.

அதோ கண்ணன் வாசலில் வந்து நிற்க்கின்ட்றான். என்னதோழா என்னநடந்தது? உனக்கு ஒன்ட்றும் தராமல் திருப்பிஅனுப்பிவிட்டதற்க்காக பாமா ருக்குமணி இருவருமே என்னிடம் கோபம் கொண்டனர்.உன்குரல் கேட்டபடியாக இருந்தது.வந்துவிட்டேன்.உனக்காக பட்டுவஸ்த்திரங்கள்,பொன்னாடைகள்,ஆபரணங்கள் எல்லாம் அவர்கள் இருவரும் சேற்ந்து என்னுடன் அனுப்பியுள்ளார்.இநத பெட்டி நிறைய உனக்குள்ள பொருள்கள்தான். எடுத்துக்கொள்.

ஏன் வியப்புடன் என்னை உற்றுப் பார்க்கிறாய்? அடடா,நான் கொடுத்த முடிச்சய் ஏன் இன்னமும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறாய்? மனைவிமக்களுக்கு கொடுக்கவில்லையா?

ஏன் ஸுதாமா முடிச்சய் விடாமல் நின்ட்றார்? மனைவியின் மூன்ட்றாவது முடிச்சிலியே வந்த கண்ணன் கொடுத்த சௌபாக்கியத்தைப் பார்த்த ஸுதாமா வியந்தார்.கண்ணன் கொடுத்தது போதும் என்ட்ற உள்நோக்கு.இப்பொழுது முடிச்சல் இருப்பது கண்ணன் கைபட்ட அவில். அது அவில் அல்ல. அளவில்லா தனம் இதைத் திறந்தால் கிடைத்த சௌபாக்கியம் அத்தனையும் தன்னிடமிருந்து போய்விடும். இப்பொழுது மனைவிமக்களின் சந்தோஷமே தனது சந்தோஷம். அவில் தின்டறது போதும் என்ட்று பாமாவுக்கு எப்படிவந்ததோ(அதாவது கொடுத்தது போதும் என்ட்று மறைமுகமாகச்சொன்னாள், கண்ணனும் புரிந்துகொண்டான்)அதுபோல் கிடைத்ததுபோதும் என்ட்று ஸுதாமாவுக்கும் தோன்ட்றின.

தொடரும்………..

 

 

 

 

 

ஐந்தாவது முடிச்சு:

கண்ணனின் கால்களில் ஸுதாமாவின் சரணாகதியின் முடிச்சு.

ஸுதாமா கைய்யிரிருக்கும் அவில் முடிச்சை பிடித்துக் கொண்டே கண்ணனின் கால்களில் வீழுந்துவிட்டான்.கதறினான்.  என்னை மாற்றாதே கண்ணா.இந்த முடிச்சு நீ போட்டுக் கொடுத்தது.இதனைத் திறந்தால் நான் மீண்டும் வாழ்க்கையில் கஷ்ட்டப் படுவேன். உன் கைபட்ட இந்தப்பொருள் புனிதமானது.இது இந்த முடிச்சுக்குள்ளயே இருக்கட்டும்.என் உடைகளை மாற்றச் சொல்லாதே.மாற்றினால் நான் உன்னை மறந்துவிடுவேன்.நான் உன்னை மறக்காமலிருக்க வழிகாட்டு.

என்னை உன்னுடன் முடிச்சுக்கொள் என்ட்று கூறி  கண்ணனின் கால்களை விடாமல் பிடித்துக் கொண்டான்.தன்னிடமிருந்த முடிச்சய் கண்ணன் காலடியிலயே வைத்துவிட்டான். அளவுக்குமேல் அமுதே விஷமாகமாறிவிடும். ஆற்றில் போட்டலும் அளந்துபோடு என்ட்றபோல் பாமாவும் கண்ணனிடம் மறைமுகமாக தன் செய்கையால் தெரிவித்தாளோ?

ஓம் கிருஷ்ணார்ப்பணம்

 

இந்த முடிச்சக்களில் என்எனன்ன வேடிக்கை பாருங்கள்

முதல் இரண்டு முடிச்சுக்கள் யசோதய் தன் பாசத்தால் சாதாரணமாக கட்டியது. அதிலும் இருவரும் குழந்தைகள். பலமாககட்டினால் அவர்கள் திறக்க சிரமப்படுவார்கள்.அதை கழற்ற ஸுதாமாவிற்க்கு கஷ்டமே தோன்ட்றவில்லை.அது தாயின்  கை பட்டது. அது நிச்சயமாக பசியைப் போக்க உதவின. வருங்கால வாழ்க்கையய்ப் பற்றி குழந்தைகள் சிந்திப்பதில்லை.

மூன்ட்றாவது முடிச்சு வாழ்க்கை சம்பந்தப் பட்டது.மனைவிமக்களை   காபபாத்துவதற்கு   ஸுதாமாவிற்க்கு கடவுளைத்  தேடிப்போகுமளவிற்க்கு விரட்டியது.

தாலிக்கயிறும் அவ்வாறே. மூன்ட்றாமது முடிச்சின் பலத்தில்த்தான் மற்ற இரண்டுமுடிச்சின் பலமே இருக்கு.அது தன் மனைவி கட்டியதால், அதும் கண்ணீர் பெருக. ஈரம் பட்டாலே முடிச்சுக்களை அவுர்ப்பது கடினம். ஆனால் கண்ணன் அதை சர்வ சாதாரணமாக அவிழ்த்துவிட்டான். கண்ணன் இதைச்செய்ததனால் ஸுதாமா கஷ்டங்கள் தீர்ந்தது. இதைத்தான் யசோதயும் ஸுதாமாவிடம் எச்சரித்தாள்,  கண்ணனின் முடிச்சயை நீ அவுக்காதேயென்ட்று. அப்பொழுதே அவுக்காமலிருந்தால்  ஸுதாமாவின் ஏழ்மை அன்ட்றே மறைந்திருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் என்பதுண்டு என்ட்ற உண்மை இங்கு விளங்குகிறது.

இன்னும் பார்ப்போம்.கண்ணன் ஸுதாமாவிடம் கொடுக்கும் பொழுது அதற்க்கு முடிச்சே போடவில்லை.  சும்மா துண்டை மூடி ஒருங்கிணைத்தர். அதை கடைசிவரை ஸுதாமா திறக்கவே இல்லை.    கடவுள் கொடுப்பதை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நம்மிடம் வரவேண்டும்.    அவர் வாழ்க்கை அதற்க் குள்ளாரே சீரும் சிறப்புமாகி விட்டது. அவருக்கு அது வேண்டாமென மனதில் தோன்ட்றியது,கண்ணனின் பாதமேதவிர.

இந்த கடைசி முடிச்சு ஸுதாமா தன் கைகளால் கண்ணன் கால்களில் தானாகவே போட்டுக்கொண்ட முடிச்சு.

ஓம் கிருஷ்ணார்ப்பணம்

 

சுந்தரேச்வரன் (முரளி)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s