புரியாத புதிர் (The Enigma)…… உலகைவிட்டுப் பிரியும் நாள்

பிறக்கும்போது அந்த

தேதி  நேர  மெல்லாம்

குறிக்க இயலுமுனக்கு

இறப்பின்  நேரமதை

குறிக்க உனக்குத்தான்

இயலாமல் போனதென்ன?

உறங்கும் நேரமதை

உருவாக்கும்   திறமையது

உனக்கும் அறிந்துவிட்டால்

உன்னைப் படைத்த கடவுளையும்

உன் கிறுக்கு மூளையால்

உலகில் கிறங்க வைப்பாய்.

இதைத் தெரிந்த கடவுளும்

உன் சூழ்ச்சிகளையறிந்து

உருப்படியாய் வாழஇந்த

உலகை உனக்குத் தந்தார்.

நீ ஆட்டம் பல நடத்தி

காட்டு  விலங்கை அழித்தாய்

பல சூழ்ச்சிகளைப் புனைந்து

ஆச்த்தி பல குவித்தாய்.

எல்லாம் எனதென்ட்று

பிறரை தாக்கி மகிழ்ந்தாய்.

அறிவின் ஆற்றல் பெற்று

ஆறு கடலின்  எல்லாம் 

ஆழம்  முழுதுமளந்தாய்.

என்ன கணக்கும் தான்

போட்டுப்பார்த்தும் நீ

இறப்பின் நேரமதை

அறிய இயலாமல்,

சேற்த்த ஆச்த்திகளை

எடுத்துச்செல்லவும் அறியாமல்

மண்ணுக்குள்   புதைந்து மறைந்தாய்.

 

 

சுநதரேச்வரன் (முரளி)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s