என்ன இது என்ன இது

என்ன இது என்ன இது என்ன சொல்வது

என்மனம் எங்கெங்கோ பறக்கின்ட்றது

என்னை அறியாமலது பேசுகிறது

எண்ணுகிறபோது என்னில் சிரிப்பூறுது (2)

 

நான்குகண்கள் பார்த்துவிட்டால் காதல் வருமா

நள் பொழுதைக் கழிப்பதற்க்கு அதுபோதுமா

ஷாஜஹான் காதலுக்கு தாஜுமகல் தானோ

சலீமுடைய காதலுக்கு கல்லறை தானோ

பூஞ்சிறகுதனைவிரித்து பறக்குமிந்த காதலுக்கு

சாட்ச்சியங்கள் பலதுண்டு எண்ணிலடங்கா

ஆகமொத்தம் என்னுள்ளில் புதிதான கற்ப்பனைகள் உருவாகுது

என்ன இது என்ன இது…………

 

வானத்தில் பறக்கவே மனம் சொல்லுது

ரெக்கைகள் இல்லாமல் அது ஏங்குது

வானவில்லை கைனீட்டித் தொடத்தோன்ட்றுது.

பக்கம் நான் செல்லச்செல்ல விலகின்ட்றது

என்ன இது என்ன இது……….

 

காதலது புனிதமென்ட்று உள்ளம் சொல்லுது

இருமனதின் ஒற்ட்றுமை என்ட்றோதுது

திராசின் இருதட்டுபோல் மனம் நிற்க்குது

வெள்ளோட்டம் பார்க்க ஒருபக்கம் சாய

கடிவாளம் போட்டமனம் மறுபக்கம் சாய

நடுவில் நான் பார்த்தேன் ஊசிமுனையொன்ட்றய்

தள்ளாடுகின்ட்றேன் எநத திசை செல்ல

இது எந்தன் மனதிலொரு விடைதெரியாப் புதிராக நிற்க்கின்ட்றது

என்ன இது என்ன இது………..

 

காலங்களெல்லாம் மாறித்தான் போகும்

காச்சிகள் பலதும் மறந்துதான் போகும்

மாறாத காச்சி அது    என்னவாகும்

நம்மிருவர் காதல் அது ஒன்ட்றே ஆகும்

என்ன இது என்ன இது………

 

இரவுபகல் நேரத்தில் மாற்றங்கள் வரலாம்

இயற்க்கை அழகில்க்கூட மாற்றங்கள் வரலாம்

நாமிருவர் என்ட்றென்ட்றும் ஒன்ட்றாகிப் போனால்

 நம்மிடையில்    ஒருபோதும் மாற்றங்களில்லை.

ஏனோ என்மனமதான்,      இன்னுமதை ஏற்க்கவே தயங்கின்ட்றது.

என்ன இது என்ன இது………

 

கனவிலும் கூடநான்   உன்னிடம் பேச

கண்களை நான் மூட உன்முகம் காண

நினைவலைகளெல்லாம் என் முன்னிலாட

பருவத்தின் மாற்றங்கள் என்ட்றறிந்தேனே.

என்ன இது என்ன இது……..

 

வானத்தில் வெண்ணிலா தேய்வதாய்த் தோன்ட்றும்

வான்வெளி நிறத்திலும் மாற்றங்கள் தோன்ட்றும்

நம் காதல் ஒன்ட்றே மாறாதென்னாளும்

அது என்ட்றும் தேயாத முழுநிலவெயாகும்

இனி தொடரும் நம்முறவில் என்னாளுமே

வாடாத மனம்கவரும் மலர்களே பூக்கும்.

என்ன இது என்ன இது என்ன சொல்வது

என் வாழ்வில் புது உணர்வை நான் கண்டபோது.

சுந்தரேச்வரன்  (முரளி)

Courtesy:   Inspiration from the  Film:  Nala Dhamayanthi       by  MOULI 

Dear  Mouli Sir, I know you right from the days at  Prithvippaakkam, Ambattur.   Year 1954/55                                       

By      Sundareswaran  alias  Murali     

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s