ஒரு கனவு ஒரு கற்ப்பனை

ஒருநாள், கனவுக்குள் கனவில் மிதந்தேன், நானும்
ஒருநாள் கற்ப்பனைத் தேரில் பறந்தேன்
தோழர்கள்: என்ன?
ஆமாம், ஒருநாள் கனவுக்குள் கனவில் மிதந்தேன்.
சினிமாவில் யார்அவர்? சூப்பர் ச்டார் போலொருவர்?
சிகரட்டைத்தூக்கிப்போட்டு பறந்துதான் பிடிப்பாரே
தோழன்: ரஜனிசாறா?
ஆமாம்!
படமிரண்டு ஓடாமல் ஊத்திக்கிட்டு போயிடுச்சு
ஜனங்களுக்கு அவர்மேலெ நம்பிக்கை குறஞசிடிச்சு
என்தலையெழுத்து மாறிடிச்சு, அதிர்ஷ்டம்தான் அடிச்சிடிச்சு
என்னதான் நடித்தேனென்ட்று எனக்கே அது தெரியும் முன்னே
அந்த இடத்தில் நானும் வந்தேனே,
ஓர் சூப்பர் ச்டார் போல் நின்ட்றேனே, நானும் சூப்பர்ச்டார் போலானே
ஆஹா! கனவுக்குள் கனவில் மிதந்தேன்.
லா லா ல ல லல்ல லா லா லாலலா (2)
தோழர்கள் சேற்ந்து: இன்னும்என்ன என்ன பாற்த்தாய் சொல்லுடா
என் வலதுபக்கம் ஐஸ்வர்யா!
தோழன்: உலக அழகீடாஆஆஆ!
இடதுபக்கம் சௌந்தர்யா!
தோழன்: படையப்பா ‘பேம்’ ஆச்சே
முன்னலே பாற்த்தேன் கௌதமியும் தாராவும்
தோழன்: ‘நயன்’ யூ மீன்?
யாஆஆஆஆ!
என்னை நான் மறந்தே போனேன்
ஏதேதோ ஆக்ஷன் செய்தேன்
டைறக்டர் என்னைவந்து கட்டித் தழுவிக் கொண்டு
என் ஆக்ஷன் சூப்பர் சொல்லிட்டார்
ஒரேடேக்கில் எல்லாத்தையும் எடுத்து தள்ளிட்டார்!
கனவுக்குள் கனவில் மிதந்தேன், நானும்
கற்ப்பனைத் தேரில் பறந்தேன்.
முன்னே நான் நடக்குமபோது
ஒருசத்தம் காதில் கேட்க்க
பின்னாலெ கொஞச்ம் திரும்பிப் பார்த்தேனடா
பாற்த்ததுமே, வெடவெடத்து பேயறஞசாப்போல் நின்னேன்டா
தோழர்கள்: என்னடா ஆச்சு?
என் பொண்டாட்டி, அவளோ ஒருத்தி
இடுப்பிலே பொடவயைச்சொருகி
தொடப்பக்கட்டை ஒன்ட்றை கைய்யில்த்தான் தூக்கிக் கொண்டு
என் பின்னாலே ஓடிவறாடா
அய்யய்யோ, நானும் என்னத்தைச்சொல்வேனடா
தோழர்கள்: அப்புறம்?
எனக்கே அது புரியலடா என்னச்சோ தெரியலடா
கனவுலகை விட்டு நானும் வெளியேதான் வந்தபோது
அவளை, தூங்கறதாய் பார்த்தேனடா
குறட்டைவிட்டு தூங்கறதாய் பார்தேனடா
ஹாஹ, ஹஹஹ்ஹ ஹஹ்ஹா ஹஹ்ஹஹா
ஒருநாள் கனவுக்குள் கனவில் மிதந்தேன்
கற்ப்பனைத் தேரில் பறந்தேன்.
தோழர்கள்: ஏண்டா நிறுத்திட்டயே
தூக்கம் வராமல் நானும் கற்ப்பனையில் மிதந்தபோது
ஆட்டக்காரனாய் வந்தேன்டா, கிரிக்கட் ஆட்டக்காரனாய் வந்தேன்டா
தோழர்கள்: தூள்டா
அவன்தான் அவன் யாரடா, காப்டன் தோணியா கொஹலியா?
மட்டையில்லாமலே ஸிக்சர் அடிப்பானடா
விளையாடாமல்க்கூட இங்கு ஜெயிப்பானடா
தோழர்கள்: ஆமாம்!
கில்லித்தண்டாடுமென்னை வம்புக்கு இழுத்தாண்டா
சும்மா இருந்தவனை தூண்டிப்பாத்தானடா
கைய்யில் நான் பந்தைவைய்த்து கபிலாட்டம வீரம்கொண்டு
சுழற்ட்றீ எறிந்தேனடா
பந்தை சுழற்ட்றி கில்லியாட்டம் எறிந்தேனடா.
கண்ணில் தெரியாதவண்ணம் பந்தது பறபறக்க
மேலும்கீழும் பார்த்தானடா, அவனும்
தலைசுட்றி விழுந்தானடா
எழுந்து மீண்டும் தண்ணி கொஞசம் குடித்தானடா.
பந்தடிபட்டு……
தோழர்கள்: அய்யய்யோஓஓ
நடுத்தண்டு உடைந்ததனால்,ஆட்டம்இழந்தானடா
ஒண்ணும் புரியாமல் நின்ட்றானடா.
எல்லோரும் சிரிக்கயிலே ஏமாட்றம் தாங்காமல்
முகத்தைமறைத்துக் கொண்டு
திரும்பித்தான் போனானடா.
தோழன்: மேல இன்னம் சொல்லுடாஆஆஆஆஆஆ
உடைந்த இருதுண்டுகளையும் இருகைய்யால் தூக்கிகாட்டி
அம்பயறும் வந்தென்பக்கம் நின்ட்றானடா
அப்பொழுது வெகுதொலைவில்த்தொங்கும் கணிப்பலகையில்பார்த்தேன்
பந்தினைக்காணோமென்ட்றறிந்தேனடா
நானும் மனதுக்குள் கொஞசம் மகிழ்ந்தேனடா
பந்தினைப்பலரும்தேட,சிலரெல்லாம் வெளியேதேட
இறுதியில் கண்டாரடா,பந்தினை
இருதுண்டாய் எல்லையய்மீறி கிடப்பதாய் கண்டாரடா
ஒருவெடியில் இருபறவைபோல் இன்னிகழ்ச்சி நடந்திடவே
உலகமகாசாதனையென்ட்றார்கள், எல்லோரும் எனக்கு
மலர்மாலை போட்டு மகிழ்ந்தார்கள்.
இதற்க்கொரு முடிவைத்தேட, மூன்ட்றாமது அம்பயர்வந்து
என்னதான் முடிவைச்சொல்வதென்ட்று என்னிடம் கேட்டான்.
முழுமூச்சாய் அடிக்கவந்து ச்டைலிலவன் மட்டையய் வீச
முதல்பந்தில் முட்டைதான் போட்டவனுக்கே
போணச்சாய் ரன்கள் ஆறை சும்மாவே கொடுங்களென்ட்றேன்
இதனை வரலாட்றில் குறிக்கச் சொன்னேன்.
கற்ப்பனையில் மிதந்தேனடா, நானும்
கண்மூடி மகிழ்ந்தேனடா
தோழர்கள்: வாஹ்! வாஹ்!
நான் அங்கே ஹீரோ ஆனேன்
பலருக்கும் கைய்யெழுத்திட்டேன்
பலரும்தான் என்னைவந்து படமெடுக்கும் வேளைதனில்
எல்லோரும் என்னைத் தூக்கி வட்டமிட்டு ஓடினாங்கடா
கற்ப்பனையில் மிதந்தேனடா, நானும்
கண்மூடிமகிழ்ந்தேனடா.
தோழர்கள்: தா தா த தக்க தை த தை
ஹும் ஹும் ஹும் ஹெ ஹ்ஹே ஹெ ஹெ ஹே.

நன்ட்றி: படம்: கோல்மால் அமோல் பலேக்கர் சாப்,மிக்க நன்ட்றி

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s